முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாரியில் வந்து மாடு திருடிய சட்டக்கல்லூரி மாணவர் உளிட்டோர் கைது

லாரியில் வந்து மாடுகளை திருட முயன்ற சட்டக்கல்லூரி மாணவருடன் மற்றொரு நபரும் கைது. குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலை அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடும் கன்று ஆகியவற்றை, நேற்று இரண்டு பேர் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தபோது மாட்டின் உரிமையாளர் சென்று கேட்டபோது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட அங்கிருந்த மக்கள் ஒன்றுகூடி, மாடுகளைத் திருடிய இருவரையும் பிடித்துச் சரமாரியாக தாக்கினர். பிடிபட்டவர்கள் அவர்களது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர்களது நண்பர்கள் 3 பேர், திருடர்களுக்கு ஆதரவாக வந்தனர் வந்தவர்களும் பிடிபடவே. மாட்டின் உரிமையாளர்கள் பிடித்து வைத்திருந்த ஐந்து நபர்களையும் குன்றத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்(வயது 30), படூர் மேடுபகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 25). டிரைவர். சதீஷ் சட்டப்படிப்பு இரண்டாம்‌ ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. திருமுடிவாக்கத்தில் உள்ள ஒரு கம்பெனியில் லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்தார். அப்போது, இருவரும் சேர்ந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு மற்றும் கன்றுக்குட்டியை வண்டியில் ஏற்றிச்செல்ல முயன்றிருப்பதும் தெரியவந்தது. அப்போது மாட்டின் உரிமையாளர்கள் வந்து தாக்கியதால் அவர்களது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர். இதையடுத்து 2 பேர் மீதும் குன்றத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். சதீஷ் அழைத்ததன்பேரில் வந்த, அவர்களது நண்பர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதுவரையில் இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் காணாமல் போயிருப்பதாக மாட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


கருத்துகள்