தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 30-07-2026) காலமானார். அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன. ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமுனா ராணி. வரதராஜுலு திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அக் காலத்திலேயே நடத்தி வந்துள்ளார். ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார். தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 1...
RNI:TNTAM/2013/50347