முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திக்க்ஷா வலைதளம் ஒரேநாடு ஒரே டிஜிடல் பயிற்சி அமர்வுகள்

திக்க்ஷா வலைதளம்- ஒரு நாடு ஒரே டிஜிட்டல் தளம் தமிழகத்தில் திக்க்ஷாவின் கீழ் 73.28 லட்சம் பயிற்சி அமர்வுகள் நடைபெற்றுள்ளன கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால்  அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மார்ச் மாத கடைசியில் இருந்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பெருந்தொற்று பரவி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களைத் திறக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளன. பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.diksha.gov.in  என்ற வலைதளம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு கல்வி குறித்த விவரங்களை அளிக்கும் தனித்துவமான வலைதளமாக விளங்குகிறது. அது அரசின் ஒரு நாடு ஒரே டிஜிடல் தளம் என்னும் நோக்கைப் பிரதிபலிக்கிறது.   நவீன கால ஆசிரியர்கள் டிஜிடல் அறிவைப் பெற்றுள்ளதால், திக்‌ஷா அவர்களுக்கு தேசிய டிஜிடல் கட்டமைப்பாக செயல்படுகிறது. திக்‌ஷா வலைதளம், ஆசிரியர்களுக்கு கல்வியில் தீர்வுகளுக்கு வழி வகை செய்கிறது. ஆசிரியர்கள் தாங்களாகவே கற்றுக்கொண்டு பயிற்சி பெற்று மதீப்பீடு செய்ய இது உதவுகிறது. பயிற்சி அம்சத்தை உருவாக்குதல், சிறப்பு குறிப்புகள், வகுப்பு ஆதாரங்கள், மதிப்பீட்டு உதவி, செய்தி, அறிவிப்பு ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு இது உதவுவதுடன், ஆசிரியர் சமுதாயத்துடன் தொடர்பையும் ஏற்படுத்த பயன்படுகிறது. மாநிலங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகளும், தங்களது இலக்குகள், தேவைகள், திறன்கள் அடிப்படையில் திக்‌ஷாவைப் பயன்படுத்தி ஆசிரியர்களை ஒருங்கிணைக்க முடியும். வகுப்பறை ஆதாரங்கள், ஆசிரியர் பயிற்சி அம்சம், மதிப்பீட்டு உதவிகள், ஆசிரியர் வரலாறு, செய்திகள், அறிவிப்பு ஆகிய திக்‌ஷாவின் அம்சங்களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி படிப்புகள், பாடத் திட்டங்கள், கருத்தியல் வீடியோக்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு பணித்தாள்கள் போன்ற கற்பித்தல் ஆதாரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களது வலிமை, முன்னேற்றம் ஆகியவற்றைக் கண்டறியலாம்.    ஆசிரியர்கள் தங்களது கைபேசி, மடிக்கணினி மற்றும் இதர உபகரணங்களில்  இந்த விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த விவரங்கள், உள்ளூர் மொழிகள், பாடத்திட்டத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தப்படும். தமிழகத்தில் இதுவரை, 73.28 லட்சம் பயிற்சி அமர்வுகள் திக்‌ஷாவின் கீழ், நடைபெற்று, பிரபலமடைந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த மூத்த ஆசிரியர் திருமதி ஆனந்தி, ஆன்லைன் கல்வி  மூலம் மாணவர்கள் வகுப்புகளைத் தவற விடுவதில்லை என்று கூறினார். ஜூம் அல்லது கூகுள் சந்திப்பு மூலம் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் பெறுகின்றனர். தேசிய ஆசிரியர் தளத்தில், ஆசிரியர்களுக்கு வகுப்பறைகள், மேம்பாட்டு வழிமுறைகள், மதிப்பீடு ஆகியவை குறித்த தொடர் கற்பித்தல் முறைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், அறிவிக்கைகள் பற்றிய தகவல்கள்  உள்ளடங்கியுள்ளன. தேசிய ஆசிரியர் தளம், அனைத்து ஆசிரியர்களுக்கும், எந்த நேரத்திலும், எங்கிருந்தும்  தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். அது குறைந்தபட்ச, பொதுவாக்கப்பட்ட தொழில்நுட்ப தளம், பல்வேறு நவீன வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும். கற்பித்தல் மற்றும் கற்றல் அம்சங்களுக்கான உபகரணங்களும் அதில் இருக்கும்.    கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாகும். அதன் மூலம் அறிவுப் பரவலை, பெருந்தொற்று போன்ற எந்த இடையூறாலும் தடுத்து நிறுத்த முடியாது. கணினி தளங்கள் மூலம் கல்வியைப் பரப்பவும், ஆசிரியர்களுடன் கலந்துரையாடவும் பயன்படும் ஆன்லைன் கல்வி  மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும், கற்றலைத் தடுத்து நிறுத்த  வாய்ப்பளிக்கக் கூடாது  என்பதால், எந்த வித இடையூறும் இன்றி தரமான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு அரசு தொடர்ந்து உதவி வருகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...