முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருதுநகர் போலவே சேலத்தில் பதிவுத்துறை துணைத்தலைவர் சிக்கினார் பலகோடி சொத்துகள்

சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத் தலைவர் வீட்டில் ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை சேலம் மண்டல பத்திரப்பதிவு துறை துணைத் தலைவர் ஆனந்த் நேற்று கடலூருக்குப் பணி மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு துணைத் தலைவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தியதை அறிந்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் ஐந்துரோடு பகுதியில் உள்ள ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து ரொக்கப் பணம் ரூ 3 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 13 லட்சம் மதிப்புள்ள 34 தங்க காசுகளையும் பறிமுதல் செய்தனர் பத்திரப்பதிவு துணை தலைவர் ஆனந்த் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்து தொடர்ந்து துணைத் தலைவரிடம் விசாரணை நடக்கிறது சேலம் மண்டல பத்திரப்பதிவு துறை துணைத் தலைவர் வீட்டில் சோதனை நடந்தது. சமீபத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலக அறையில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த விஷ்ணுபரண் (வயது 37) என்பவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் குரூப்-1 தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்றவர். இவரது அலுவலகத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பல்வேறு காரணங்களுக்காக நேரடியாக வந்து இலஞ்சப் பணம் கொடுப்பதாக இலஞ்ச ஒழிப்புப் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததன்பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா ஆகியோர் கண்காணிப்பு அலுவலர் பொன்ராஜ் தலைமையில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தைக் கண்காணித்தனர். அப்போது வெம்பக்கோட்டை யூனியன் ரெங்கபாளையம் பஞ்சாயத்துத் துணை தலைவர் ராமர் என்பவர் உதவி இயக்குனர் அலுவலகத்திற்குள் சென்றார். இதைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்ததையடுத்து அவர்கள் இராமரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் திட்ட வேலை நிர்வாக அனுமதி பெற ரூ.20 ஆயிரம் இலஞ்சம் கொடுக்க வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்ததனைத் தொடர்ந்து காவல்துறை அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்ததையடுத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்த விஷ்ணுபரணின் டிரைவர் சரவணகுமார் (வயது 50) என்பவரை சோதனை செய்த போது அவரின் கால்சட்டை பையில் ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்த அவர் அந்த பணத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் கிடந்ததாகவும், அதனை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய தகவல் நம்ப முடியாத நிலையில், போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி பணம், பல்வேறு பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் இலஞ்சமாகப் பெற்றது தெரியவந்ததையடுத்து அந்தப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விஷ்ணுபரண், சரவணக் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரியிடமும், டிரைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் சேலத்தில் மேற்கண்ட அதிரடி சோதனை நடந்தது. சேலம் பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி ஆனந்த் அவர்களின் முறைகேடான சொத்து குவிப்பு அறிக்கை பின்வருமாறு' என்ற தலைப்பில் தொடங்கும் அந்த நோட்டீஸில் `வாராந்திர கந்து வட்டி கலெக்‌ஷன்: ஐ.ஜி., உத்தரவு மீறி ஜூனியர்களுக்குப் பொறுப்பு போட்டு சம்பாதித்தது என ஒரு பெரும் பட்டியலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம் மேற்கு போன்ற மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தொடர்ந்து அதில், ``பொறுப்புப் பதவிகள் மூலம் மாதாந்திர கலெக்‌ஷன் 20 லட்சத்து 40 ஆயிரம். பொறுப்பு பதவிகள் மூலம் வருடாந்திர கலெக்‌ஷன் சுமார் 2 கோடியே 45 லட்சம். கடந்த 4 வருடத்தில் சுமார் 10 கோடி. இது தவிர சேலத்தில் சுமார் 60 அலுவலகங்களில் மாதாந்திர கலெக்‌ஷன் சுமார் 120 லட்சம். ஒரு வருட சேலம் மண்டலத்தில் கலெக்‌ஷன் 15 கோடிகள். கடந்த 4 வருடத்தில் மொத்தம் 60 கோடிகள்.இது தவிர லேஅவுட் நிர்ணயம், லேஅவுட் முறையீடு என இவரது கலெக்‌ஷன் பல 100 கோடிகளைத் தாண்டும். மிகவும் குறைவாகப் பார்த்தாலும் கடந்த 4 வருடத்தில் இவரது சேலம் மண்டல கலெக்‌ஷன் குறைந்தது 200 கோடிகளைத் தாண்டும். சேலத்தில் 4 வருடத்திலேயே 200 கோடி என்றால் இவரது ஒட்டு மொத்தப் பணியில் சேர்ந்த நாள்முதல் கலெக்‌ஷன் 400 கோடிகளைத் தாண்டும். அரசியல்வாதிகளை விஞ்சும் அளவுக்கு ஊழல் புரியும் ஆனந்த் டி.ஐ.ஜி., இந்த ஊழல் பணத்தில் ஐ.ஏ.எஸ்., ஆக முயல்கிறார். இவர் ஐ.ஏ.எஸ் ஆனால் தமிழ்நாட்டையே விற்று விடுவார். சேலம் மண்டல டி.ஐ.ஜி ஆனந்த்தின் கலெக்‌ஷன் ஏரியாக்கள்: கிருஷ்ணகிர் உதவி டி.ஆர் அலுவலகம், சூளகிரி எஸ்.ஆர் பாய்கர், ஓசூர் எஸ்.ஆர் நேருஜி, தர்மபுரி எஸ்.ஆர் ராசிகண்ணு, நாமக்கல் எஸ்.ஆர் சுந்தர வடிவேல், திருச்செங்கோடு எஸ்.ஆர் தமிழ்ச்செல்வன், பரமத்திவேலூர் ஓ.ஏ ஷஃபி, தர்மபுரி எஸ்.ஆர் திருப்பதி, மகுடஞ்சாவடி எஸ்.ஆர் சசிந்தர். சேலம் டி.ஐ.ஜி ஆனந்த் ஜீப் வரும் வழியில் இவர்கள் முன்கூட்டியே கலெக்‌ஷன் செய்து பணத்தை ஒப்படைக்க, அவர் ரயிலில் ஏறி சென்னை விரைந்து விடுவார்'' என நீளும் இந்தக் கடிதத்தில்... லேஅவுட் நிர்ணயம், முறையீடு வெற்றிகரமாக முடித்தால் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி என லிஸ்ட் நீளும். வேறு வழியின்றி இவர் கையெழுத்துக்காக பலரின் தலையெழுத்து மாறியுள்ள தகவல் அதிர்ச்சியாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...