முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக மாநில தலைவர் வேல் யாத்திரை வழக்கு உயர்நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வரும்

பாஜக வின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக வின் தமிழகப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் வாகனங்கள் போன்ற அனைத்து விவரங்களுடனும் காவல்துறைக்கு புதிய விண்ணப்பம் வழங்க அவருக்கு அனுமதிக்கிறது.அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட அரசாணை நவம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி வரை பொது இடங்களில் எந்தவொரு கூட்டத்தையும் நடத்த அரசாணை தடை செய்கிறது.திருத்தணி முருகன் கோவிலில் யாத்திரை துவக்கநாளில் ஏராளமான பாதுகாவலர்கள் காவல்துறை சார்பில் குவிக்கப்பட்டு பக்தர்களிடம் தீவிர சோதனைகளுமஹ நடத்தப்பட்டது. திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த காவல்துறை அப்போது அனுமதி அளிக்கவில்லை.இதனிடையே சென்னையிலிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர் முருகனை வழிபட நான் விரும்புகிறேன். வழிபடுவதற்கு எனக்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது. அதனால் நான் திருத்தணி புறப்பட்டுச் செல்கிறேன் என்றார்.இந்த நிலையில் சென்னை எல்லையான நசரத்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டனர். வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் திருத்தணி செல்லும் எல். முருகனை எல்லையில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் நசரத்பேட்டையில் முருகன் தடுத்து நிறுத்தப்பட்டு 5 வாகனங்களுடன் மட்டும் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல காவல்துறை அனுமதித்தனர். அதேபோல் ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தம் கடமையை செய்யும் என கூறியிருந்த சூழ்நிலையில் திருத்தணியை சென்றடைநத பாஜக கட்சி மாநில தலைவர் முருகன். அங்கு முருகனுக்கு அரோகரா சரண கோஷங்களுடன் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கையில் வேல் ஏந்தியபடியே திருத்தணி முருகன் கோவிலில் முருகன் சாமி தரிசனம் செய்தார். பின் வேல் யாத்திரை புறப்பட தயாரானார். ஆனால் காவல்துறை வேல் யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை என கூறி முருகன் உள்ளிட்ட பாஜகவினரை திருத்தணியில் கைது செய்தனர். பாஜக தலைவர் முருகன் யாத்திரை பயணத் திட்டத்தின் ஒருபகுதியாக சென்னை முதல் திருத்தணிக்கு வேலுடன் பயணம் செய்துவிட்டார். இதற்கு அனுமதி அளித்த காவல்துறை முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதித்ததாகவே பதிவு இதனால் பாஜகவின் செயல் திட்டத்தில் ஒரு பகுதி வெற்றியும் பெற்றது. இன்னொரு பக்கம் திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை புறப்பட்ட முயன்ற முருகன் கைது செய்யப்பட்டார். இதன்மூலமாக தமிழக அரசு, வேல் யாத்திரைக்கு விதித்த தடையை செயல்படுத்திவிட்டோம் என நிரூபித்துவிட்டது. எல்லோருக்கும் சாதகமாய் அரோகரா கோஷங்களுடன் சுபமாய் முடிந்துவிட்டது வேல் யாத்திரை. இச் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.கவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து பாஜக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு.நீதிபதிகள் சத்தியநாராயணன்,ஹேமலதா அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...