முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் அனைத்து ஆலயங்களும் தன்னாட்சி அதிகாரம் பெறும் காலம் கனிகிறது

கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது. Share     திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.விசய நகர பேரரசின் மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. அப்படி உள்ள ஸ்தலத்தில் ஒரு அர்ச்சகர்கள் பிரச்சினை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானாச ஆகம பரம்பரையை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர். தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த ரமண தீட்சிதலு இருந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு மற்றும் சீனிவாசா தீட்சிதலு, நாராயணா தீட்சிதலு, நரசிம்மா தீட்சிதலு ஆகிய அர்ச்சகர்களுக்கு வயது வரம்பைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வும் அளிக்கப்பட்டதுகுறித்துக் கூறிய தலைமை அர்ச்சகர், தேவஸ்தான முறைகேடுகளை நான் வெளியில் கூறியதால், அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை 65 வயதுக்கு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் ஏற்படுத்திய சட்டப் பிரிவின்படி தேவஸ்தான அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்சவரம்பை நிர்ணயிக்க கூடாது. எனவே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன் என்கிறார். இந்த விவகாரம் உடனடியாக பாஜக.வின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியிடம் கொண்டு செல்லப்படவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறியுள்ளதால் கோடைக்கால விடுமுறை முடிந்து, நீதிமன்றம் தொடங்கியதும், இரண்டாவது, மூன்றாவது வாரம் வழக்கு தாக்கலாகும் நிலை, நேற்று பூரி சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேசிய பின் டிவிட்டர் பக்கத்தில் "தாம் திருமலை திருப்பதி கோவிலை சந்திரபாபு நாயுடு கும்பலிடமிருந்து விடுவித்த பின், புரி ஜகந்நாதர் ஆலயத்தை அரசின் பிடியில் இருந்து விடுவித்துக் கொடுப்பேன் என்று சங்கராச்சார்ய சுவாமியிடம் கூறியதாகவும் இன்னும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள் குறித்து, அர்ச்சகர்கள் பகிரங்கப் படுத்தியதால், அவர்களைப் பழிவாங்க முயன்றது நிர்வாகம். இதை அடுத்து, அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனால், தாங்கள் பரம்பரை அர்ச்சகர்கள் என்றும் தங்களை அவ்வாறு பணி நீக்கம் செய்யவோ, ஆலயத்துக்குள் நுழைவதைத் தடுக்கவோ, திருப்பதி தேவஸ்தானத்துக்கோ, மாநில அரசுக்கோ எந்த வித உரிமையும் முகாந்திரமும் கிடையாது என்று அவர்கள் வாதிட்டனர். செப்டம்பர் மாதம், திருப்பதி ஆலய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதலு உள்ளிட்ட அர்ச்சகர்களில் சிலர் ஆந்திரத்தை அடுத்து, தமிழகத்தின் சென்னையிலும் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது, திருப்பதி கோவிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை பகிரங்கமாகச் சொன்னார்கள். பொதுவாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களின் சொத்துகள் கொள்ளை அடிக்கப் படுதல், ஆகம விதிகளை மீறுதல், நகை, ஆபரணங்கள் கொள்ளை போவது என பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள், ஆந்திரத்தை அலறடித்தது. தமிழகத்தில் அதன் விபரீதங்கள் எதுவும் ஊடகங்களால் வெளிப்படுத்தப் படாமலுமஹ போனது. ஆண்டாண்டு காலமாக தாங்கள் பணியாற்றி வரும் கோவிலில், பெருமாளுக்கு நிவேத்தனம் செய்ய பிரசாதம் தயார் செய்யும் சுயம்பாகம் மடப்பள்ளியை எவரும் இதுவரை திருப்பணி செய்வதாகக் கூறி கைவைத்ததில்லை. காரணம், சீனிவாசப் பெருமாளுக்கு நிவேதன உணவு செய்வித்தவர் பகுளாம்பா என்ற தாயார். அவரின் அம்சமாக இன்றளவும் அவரே நிவேதனத்தை செய்து வருவதாகக் கருதுபவர்கள் பலர். ஆனால் தற்போது, எத்தனையோ விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மடப்பள்ளியை இடித்து நவீனப் படுத்துவதாகக் கூறி, சில வேலைகளைச் செய்துள்ளனர். அப்போது, கிருஷ்ண தேவராயர் காலத்து புதையல்களை அங்கிருந்து எவருக்கும் தெரியாமல், சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டுகள் திருமலை திருப்பதியில் எதிரொலிக்கின்றன. பெருமாளுக்கான நகைகள், ஆபரணங்களை, கடந்த கால் நூற்றாண்டாக தாங்கள் பார்க்கவில்லை என்றும், அன்பர்கள் அளிக்கும் புதிய நகைகளே பெருமாளுக்கு அணிவிக்க தேவஸ்தானத்தின் தரப்பில் எடுத்துத் தரப்படுவதாகவும், பழைய நகைகள் எங்கே போயின என்பது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், அர்ச்சகர்கள் குற்றம் சாட்டினர். பழைய நகைகளைக் கண்டு மதிப்பீடு செய்யும் எவரும் அண்மைக் காலத்தில் நியமிக்கப் பட்டு அவை குறித்த தகவல்கள் எவருக்கும் பகிரப் பட வில்லை என்பது, அர்ச்சகர்களின் குற்றச்சாட்டு அதில் முதலாவதாக . பரம்பரை அர்ச்சகர்களை மீண்டும் சந்நிதி பணியில் அமர்த்த வேண்டும். அடுத்ததாக. சிபிஐ விசாரணை வேண்டும். ஆபரணங்கள், சொத்துகளை கணக்கெடுத்து சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் . அரசியல் சாசனப் படி, மதசார்பற்ற ஒரு நாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாயிலாக கோயிலை அரசு நேரடியாக நிர்வாகம் செய்வது நிறுத்தப் படவேண்டும். டி.டி.தேவஸ்தானம் சாது சந்நியாசிகள் கொண்ட மத ரீதியான அமைப்பின் மூலம் நிர்வகிக்கப் பட வேண்டும்… – ஆகிய மூன்றையும் வலியுறுத்தி, பா ஜ க மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளநிலையில், இது குறித்தறிந்த சந்திரபாபு நாயுடு அழாத குறையாக, மத்திய அரசு திருப்பதி கோயிலை எடுக்க சதி செய்வதாக வெளிப்படையாகப் பேசி வருகிறார். சித்தூர் மாவட்டம், மதனப் பள்ளி பொதுக்கூட்டத்தில் பேசியவர், திருப்பதி கோவிலை தாரை வார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளார். ஆனால் ஏழுமலையான் கோயிலை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. ஏழுமலையான் கோயிலை விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஆந்திராவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்றத் தவறி விட்டார் எனப் பேசினார். ஆனால், திருப்பதி கோயிலில் கை வைத்து தான் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திருப்பதி மலைத் தொடர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். திருப்பதி கோவிலும் ஆந்திர அரசியலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்கள் ஆதிக்கத்தை டி.டி.தேவஸ்தானத்திலும் உள்புகுத்தி பலவித முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் வரும் நிலையில், திருப்பதி கோவிலை தொல்லியல் துறை எடுத்துக் கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது தொல்லியல் துறைக்கு திருப்பதி கோவில் அளிக்க முடியாது என எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து முடிவை மத்திய தொல்லியல் துறை திரும்பப் பெற்றது. இதற்கிடையே, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி அரசியலால் கலங்கிப் போயுள்ள சந்திரபாபு நாயுடு. ஏற்கெனவே, மாநில அரசியலில் பாஜக.,வின் தலையீட்டைத் தவிர்க்கத்தான் தன் மகனுக்காக பாஜக., கூட்டணியை உதறினார். இப்போது, திருப்பதி ஆலய ரூபத்தில் டாக்டர் சுவாமியின் வடிவில் சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய நெருக்கடி வந்துள்ளது. இதனால் முடிவில் இந்துசமய அறநிலையத்துறை இந்தியா முழுவதும் இந்து ஆலயங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு தேவை என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அதனால் மாநில நிர்வாக ஆலயங்கள் இந்தியா முழுமைக்கும் ஒன்றாகி தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுயம்புவாகக் கூடிய சூழல் கனிந்த நிலை காணமுடிகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த