இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 குறித்து நாடுமுழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்துவும், அவர்களை இதில் பங்குபெற செய்யவும்,  நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், “சமூக வளர்ச்சிக்காக நீர் அறிவியல், நாட்டை கட்டமைத்தல் மற்றும் தற்சார்பு இந்தியா” என்னும் தலைப்பிலான முன்னோட்ட நிகழ்ச்சியை காணொலி மூலம் நடத்தியது.

இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளர் டாக்டர் டி ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விஞ்ஞான பாரதியின் அமைப்பு செயலாளரான திரு ஜெயந்த் சஹஸ்ரபுத்தே இதில் பங்கேற்று இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, 2020 டிசம்பர் 22-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 25 வரை மெய்நிகர் தளத்தில் நடைபெறும். காணொலி மூலம் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழா இதுவாகும். 

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா