வி.கே.சசிகலா நடராஜன் ஜனவரி 27 ஆம் தேதிக்கு முன் விடுதலை இல்லையென சிறை நிர்வாகம் தகவல்
 வி.கே.சசிகலா நடராஜன்  ஜனவரி 27 ஆம்  தேதிக்கு முன் விடுதலை இல்லையென பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தலா நான்கு  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா தவிர்த்து  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பிரப்பன அக்ரஹாரா சிறைத் தண்டனைக் காலம் 2021 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. 

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறைக் கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்புச் சலுகையைப் பெற முடியும். எனவே வி.கே.சசிகலா நடராஜன் 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்படுமெனக் கூறப்பட்ட

 நிலையில் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா  பெங்களூரு பிரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக் கொடுத்திருந்தார். அதை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ள நிலையில் சமூக ஆர்வலர்.டி. நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 ன் படி சசிகலா நடராஜன் குறித்துக் கேட்ட  கேள்விகளுக்கு பிரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம்

சார்பில்  சசிகலா நடராஜன்  ரூபாய்.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனைக் கைதி, 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்கு தண்டனையில் சலுகை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளதாகக் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதன்படி பார்த்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறைச் சலுகை கிடைக்காது என்று சிறை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பிரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி 2021 ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தான் சசிகலா நடராஜன்  விடுதலை ஆவார் என உறுதி  கூறப்படுகிறது. பெங்களூர் சிறை நிர்வாகம் வெளியிட்ட தகவல்.. 

குமாரசாமி தனது தீர்ப்பில் நான்கு பேரின் வருவாய்க்கு அதிகமான சொத்து கணக்குக் கூட்டலில் தவறிழைத்து விட்டதாகப் பேசப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, ஜெயலலிதா மறைந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டதை யடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல், பெங்களூர் நகரில் உள்ள பிரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், சசிகலாநடராஜண், இளவரசி ஜெயராமன்   மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால்  அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக சசிகலா விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் தான் பெங்களூரைச் சேர்ந்த தகவல் ஆர்வலர்  நரசிம்மமூர்த்தி சிறைச்சாலையில் சசிகலா நடராஜன்  கழித்த நாட்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுள்ளார். அதில், 14.2.2021 ஆம் தேதியோடு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவு பெறுகிறது. 6.10.2017 முதல் 12.10.2017 வரை 5 நாள்களும், 20.3.2018 முதல் 31.3.2018 வரை 12 நாள்களும் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.

மொத்தம் 17 நாள்கள் வெளியே வந்திருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரோல் தினத்தையும் கூட்டினால், 2021 மார்ச் 3 ஆம் தேதி சசிகலா ரிலீஸ் ஆக வேண்டியிருக்கும். ஆனால், ஏற்கனவே இதே வழக்கில் சசிகலா 35 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த நாட்களை கழித்தால், ஜனவரி 27ஆம் தேதி சசிகலா நடராஜன்  வெளிவருகிறார்.விடுதலை தேதி என்ற ஒன்றை சிறை நிர்வாகம் கூறவில்லை என்றாலும், கணக்குப்படி, கழித்துவிட்டு பார்த்தால் ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளார். கோடை காலத்தில்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சசிகலாவின் வருகை இருக்கும் என்பதால் அரசியல் களம் உஷ்னமாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா