உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மேற்குவங்க சுற்றுப்பயணம்பாஜகவின் ஜெ.பி.நட்டாவின் பயணத்திற்கான பாதுகாப்பு பணிகளுக்கு பொறுப்பான 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மாறுதல்  செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு விடுவிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டதனால், மத்திய பாஜக அரசுக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான அதிகார மோதலானது உச்சக்கட்டத்துக்கு போன சூழலில்தான், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா மேற்கு வங்கம் சென்றுள்ளார்..இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம்   விடிகாலை 2 மணிக்கு சென்றடைந்தார் அமித்ஷா. பாஜக  கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.திரிணாமுல் காங்கிரசை விட்டு விலகிய பல பிரமுகர்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கும் நிலையில் மேலும், மிட்னாப்பூரில் விவசாயி ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிடும் அமித்ஷாவின் இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணமானது, மேற்கு வங்க அரசியலில் சில மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா