முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுப் பாலினத்தவர் குறித்த காணொலிக் கருத்தரங்கு


மாற்றுப் பாலினத்தவர் குறித்த 



மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிக்குமார் வலியுறுத்தல்

திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரின் நலனுக்காக கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதில் இருந்த பாதகமான அம்சங்கள் குறித்து மாற்றுப்பாலினத்தவர் போராடிய பிறகு இந்த ஆண்டு திருத்தங்களுடன் இந்தச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.  இப்போது மாற்றுப்பாலினத்தவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைத்துள்ளது.  ஆனால் சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் இவர்கள் சமுதாயத்தில் கண்ணியமாக வாழ்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. எனவே மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே அரசு, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்காகப் பாடுபட வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் து.ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் விழுப்புரம் & கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய மனித உரிமைகளும் மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளும் என்ற காணொலி கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசியபோது திரு ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

`அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள சமத்துவம் நீடித்து நிலைக்க வேண்டுமானால் சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் சமத்துவம் ஏற்பட வேண்டும். நரிக்குறவர் வாரியம், அரவாணிகள் வாரியம் உருவாக்க நான் பாடுபட்டுள்ளேன். பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்படாத சூழல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் மறைமுகமாகத் தொடர்கின்றது. இவற்றை மாற்றி சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் ஏற்பட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம்’ என்று திரு ரவிக்குமார் மேலும் வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.மா.அண்ணதுரை தலைமையுரை ஆற்றினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தன்னளவில் மனித உரிமைகள் பலவற்றை உறுதி செய்கின்றது. சொல்லப்பட்டுள்ள உரிமைகளோடு சொல்லப்படாத மறைமுகமான உரிமைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன. பல்வேறு சூழல்களில் மனித உரிமைகள் மறுக்கப்படும்போதுதான் பிரச்சினை எழுகின்றது.  அடுத்தவரின் உரிமைகளை மதிக்கவும் அவற்றை அங்கீகரிக்கவும் செய்தால் சமுதாயத்தில் சமநிலை ஏற்படும்.

கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் திருமிகு. கோ.அன்பழகி தனது சிறப்புரையில் மாவட்டத்தில் 2008-இல் திருநங்கைகள் நல வாரியம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில்  400 மாற்றுப் பாலினத்தவர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 236 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 150 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் 23 பேருக்கு குடிமைப் பொருள் வழங்கல் (ரேஷன்) அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான ஓய்வூதியங்கள் 2019-20 ஆம் ஆண்டில் 36 பேருக்கும் 2020-21 ஆம் ஆண்டில் 51 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.. 84 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் தரப்ப்ட்டுள்ளன. சுய தொழில் தொடங்க முன்பு 20,000 ரூபாய் மானியமாகத் தரப்பட்டது. இப்போது இது 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  20 பேருக்கு ரூ.20,000 வீதமும் 3 பேருக்கு ரூ.50,000 வீதமும் சுய தொழில் தொடங்க மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று அன்பழகி மேலும் தெரிவித்தார்.

அறிமுகவுரை ஆற்றிய மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது உரையில் கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கும் பணிகளின் அடிநாதமாக மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது. சுகாதார வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; ஒருவரும் கவனிப்பில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது; புறக்கணிப்பு, கறைப்படுத்தல் எதுவும் இருக்கக் கூடாது; ஊரடங்கு மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி  உள்ளதாக  தெரிவித்தார்.

மதுரையில் உள்ள மாற்றுப் பாலினத்தவர்களுக்கான ஆதார வள மைய டிரஸ்ட்டி திருமிகு பிரியாபாபு தமிழ்நாட்டில் வரலாற்று ரீதியில் திருநங்கைகள் சமுதாயத்தில் மேன்மையாக நடத்தப்பட்டு வந்ததையும் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட 1871 ஆம் ஆண்டின் குற்றப் பரம்பரையினர் சட்டம் இவர்களைக் கீழ்நிலைக்குத் தள்ளியதையும் பல உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார்.

புதுச்சேரியில் உள்ள சகோதரன் அமைப்பின் தலைவர் டாக்டர் ஷீத்தல் சமுதாயத்தில் மாற்றுப்பாலினத்தவருக்கு உரிய இடம் வழங்கப்படாமல்தான் இருக்கிறது. ஆனால் இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எங்களையும் மனிதர்களாக மதிக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் மீது அன்பு செலுத்தினாலே போதும்; பச்சாதாபம் வேண்டாம் என்று தனது உரையில் தெரிவித்தார்.

முன்னதாக கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.ராஜீஸ் குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில்  விழுப்புரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.ராம்சந்திரன் நன்றி கூறினார். கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணத்தார்.

இந்தக் காணொலிக் கருத்தரங்கில் இளையோர் மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...