தமிழக அதிரடிப்படையினருக்கான இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்துசெய்த உயர்நீதிமன்றம்தமிழக அதிரடிப்படையினருக்கான இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்துசெய்த உயர்நீதிமன்றம் .சந்தனக் கடத்தல் வீரப்பனை வீழ்த்தியதால் அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிரடிப்படையிலிருந்து 752 பேருக்கு இரட்டைப் பதவி உயர்வு வழங்கிய அரசாணை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதிரடிப் படையினருக்கு மீண்டும் பணி மூப்பு வழங்குப் பிறப்பித்த அரசாணைக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடிப்படை இரட்டை பதவி உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது

தமிழ்நாடு காவலர் பணிகள் விதிகளில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட.     உத்தரவாகும்.சந்தன வீரப்பன் சுடப்பட்ட 2004 ஆண்டு வழக்கில் இரட்டைப் பதவி உயர்வு பெற்ற 2013 ஆம் ஆண்டு  அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சந்தனக்காடு வீரப்பனை சுட்டுக்கொல்ல அப்போது அதிரடிப் படையிலிருந்த 752 தனிப்படைக் காவல்துறையினருக்கு  முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா இரட்டைப் பதவி உயர்வு வழங்கிய நிலையில்  அதன் பின்  அந்த 752 நபர்களுக்கும் பணி மூப்பு வழங்கப்பட்டிருந்ததனால் அதிரடிப் படையில் இடம்பெறாத பிற அதிகாரிகள் அனைவரும் பதவி உயர்வில் பாதிக்கப்பட்டதால், 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்த. போது  அவர்களுக்கு பணி மூப்பு மீண்டும்  வழங்கப்பட்டு மற்றொரு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிராக சென்னை  உயர்நீதிமன்றத்தில் அதிரடிப் படையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு, அதிரடி படையினருக்கு இரண்டாவது பணி மூப்பு வழங்கும் வகையில், காவல்துறை சர்வீஸ் விதிகளில் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. அதற்காக ஒரு புது அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 2013 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை  ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சட்ட முன்னுதாரணங்கள் இருக்கும்போது, அதற்குமுரணாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரட்டைப் பதவி உயர்வு என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும், ஒருமுறை பதவி உயர்வு வழங்கியதே சரி என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம்தேதி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தமிழக அதிரடிப்படை காவல்துறையினரால் சந்தன வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, வீரப்பன் உடல் மேட்டூர் அருகில் மூலக்காட்டில் அடக்கம் செய்யப்படவே நினைவு நாளில் வீரப்பன் இண்டாம் மனைவி முத்துலட்சுமியும் அவரது உறவினர்களும்  அஞ்சலி செலுத்துவர்.தற்போது  பாஜக கட்சியில்  தமிழக பாஜக தலைவர் முருகன் வீரப்பனின் மகள் வக்கிலாகவுள்ள வித்யா ராணிக்கும்  மாநில இளைஞர் பிரிவு துணைத் தலைவராக நியமனம் பெற்றார் 2020 பிப்ரவரியில்  வழக்கறிஞரான வித்யா ராணி , பாஜக மேலிடப் பொறுப்பாளரான  முரளிதரராவ் மற்றும்  முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை  இணைத்துக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா