ரகுவரன் ஆவல் பூர்த்திசெய்த ரிஷிவரன்
நடிகர் ரகுவரன் வேலாயுதம் 1958 டிசம்பர் 11 ல் பிறந்தார். 19 மார்ச் 2008 ல் இறந்தார். அவர்  200 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார்.  “நடிகர் தனது சிறப்பு நடை மற்றும் குரல் பண்பேற்றம்     மூலமாக தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். இப்படி ஒரு நல்ல நடிப்பு உணர்வு கொண்ட  நடிகர். தமிழுக்கு “ஏழாவது மனிதன்”  மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். இன்றும் ரகுவரனின் வில்லத்தனமான நடிப்பிற்கு நிகரான வில்லன் நடிகர்கள் யாரும் இல்லை . நடிகர்  ரஜினிகாந்த்  நடித்து மாபெரும் ஹிட் ஆன “பாட்ஷா” படத்தில் ஆண்டனி கதா பத்திரத்திரமும்,  பிறகு “யாரடி நீ மோகினி” படத்தில் தந்தை பாத்திரத்தில்  நடித்து இருந்தார். மாறுபட்ட கதா பாத்திரங் களில் நடித்த ரகுவரன் 2008 ஆம் ஆண்டில் மாரடைப்பால்  மரணமடைந்தார்.  நடிகை ரோகிணியைத் திருமணம் செய்து ஒரு சில பிரச்சனை களால் பிரிந்தும் இருந்தார். சில வருடங்களுக்கு பிறகு நடித்த “முதல்வன்” படத்தில் அவருடைய வில்லன் நடிப்பு சிறப்பு  மற்றும்  திருமலை படத்தில் சாதுவாகவும் விஜயின் “சச்சின்” படத்திலும் ஆர்.சி.விதியின் கூட்டுப்புழுக்கள் படத்திலும்  நடித்திருந்தார். ரகுவரனுக்கு ரிஷிவரன் மகனாவார். ரகுவரன் சினிமாவில் நுழைந்ததே இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையில்  இசை மீது கொண்ட பிரியத்தால் இளையராஜா இசைக்குழுவில் கிட்டாரும்  வசித்து வந்தார். ரகுவரன்  இசையமைத்து பாடிய பாடல்களில் சிலவற்றை “raguvaran musical journey” என்ற ஆல்பத்தை ரஜினிகாந்தை வைத்து வெளியிட்ட அவரது மகன் ரிஷிவரன் தந்தையின் இசை ஆசையைப் பூர்த்தி செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா