இருவழக்குகளில் சாட்சியமளிக்காத காவல்துறை பெண் ஆய்வாளருக்கு கோபி நீதிமன்றம் பிடிவாரண்ட்

சேலம் அணைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாளுக்கு பிடிவாரண்ட்


பிறப்பித்து கோபி நீதிமன்றம் ஆணை. சேலம்  மகளிர் காவல்துறை ஆய்வாளர் இரண்டு  வழக்குகளில் சாட்சியமளிக்க பலமுறை சம்மன் அனுப்பியும் பழனியம்மாள் ஆஜராகாததால் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத, சேலம் பெண் காவல்துறை ஆய்வாளருக்கு, கோபிசெட்டிப் பாளையம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி ரேவதி,(வயது 31) உறவினர் சவுந்தர், (வயது25) இருவருக்கும், நிலப் பிரச்சினை  சம்பந்தமாக சிவில் தகராறு  இருந்தது. 2015 ஆம் ஆண்டு, ஜனவரு, மாதத்தில், ரேவதிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ரேவதி புகாரின் படி, அப்போதைய பங்களாப்புதூரில் காவல்துறை சார்பு ஆய்வாளராக இருந்த  பழனியம்மாள் வழக்குப் பதிந்து விசாரித்தார். இதேபோல்,மற்றொரு வழக்கு  டி.என்.,பாளையத்தை சேர்ந்த கருப்புச்சாமி, (வயது 30) அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, (வயது30), சிகாமணி, (வயது30), பழனிச்சாமி, (வயது30); ஆகியோர்  2015 ஆம் ஆண்டு  டிசம்பரில் கருப்புச்சாமியை தாக்கியதாக  அவரது புகாரின் படி, அப்போதய காவல்துறை சார்பு ஆய்வாளரான பழனியம்மாள் விசாரணை நடத்திய இவ்விரு வழக்கும் கோபிசெட்டிப்பாளையத்தில்  நீதித்துறை நடுவர். 1 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு பதிவுசெய்த விசாரணை  சாட்சியாய்  விசாரணை அதிகாரியான பழனியம்மாள், ஆஜராகாததனால் நீதிபதி பாரதிபிரபா, தொடர்ந்து மூன்று விசாரணைக்கு ஆஜராகாத பழனியம்மாளுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பழனியம்மாள் பணியில்  உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா