பலவீனபிரிவினருக்கு பிந்தைய மெட்ரிக் உதவித்தொகை திட்டம் திருத்தம்

பலவீனமான பிரிவினருக்காக இந்திய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பிந்தைய மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை திருத்தியதன்மூலம் நிதி ஒதுக்கீடு .5 .59,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு பயனளிக்கும் மற்றும் பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்யும்.      மைய அரசு திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பினை தொடரும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவ / மாணவியர்க்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.1,08,000/-க்கு மிகாமல் இருப்பின், குறிப்பேடுகள் வாங்குதல் போன்ற கட்டாயச் செலவுகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் ஆகியவற்றை ஈடுசெய்ய அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.330/- வரை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.

இவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் இத்தொகை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.740/- வரை பராமரிப்புப்படியாக வழங்கப்படுகிறது.

இவை தவிர மாணவ / மாணவியர்களால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் அக்கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா