மதுரையில் வந்தடைந்த வைகை தண்ணீர்

வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் மேலூர் பகுதி இரு போக பாசன நிலங்களுக்காக முறைப்பாசன அடிப்படையில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு

முறைப்பாசன அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 62 அடி வரை உயர்ந்ததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் படி  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.  அணையின் பிக்அப் டேம் பகுதியில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்ததால் அவரை தேடும் பணியில் ஊழியர்கள், தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். மாலை 4.30 மணியளவில் அவர் உடல் மீட்கப்பட்ட பின்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

71 அடி உயரமுள்ள வைகை அணையில் தற்போது  நிலவரப்படி 60.37 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1513 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட வைகை பூர்வீக பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் சேர்த்து 5059 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு அது மதுரை வந்து சேர்ந்தது.

நீர் இருப்பு 3673 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. தற்போது திறக்கப்படும்  தண்ணீர் வருகிற 17-ந் தேதி வரை 3 கட்டங்களாக 1792 மில்லியன் கனஅடியாக  திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசன நிலங்களுக்காக வைகையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருபுறம் உள்ள கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்து வரும் நாட்களில் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக உள்ளது. வரத்து 484 கன அடி. திறப்பு 1444 கன அடி. நீர் இருப்பு 3748 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.50 அடி. வரத்து 41 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 425 மில்லியன் கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.31 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100.05 மில்லியன் கன அடியாகவும் உள்ளன.

கூடுதல் தண்ணீர் திறப்பால்

வைகை அணையிலிருந்து மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டப் பாசனத்துக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மதுரையில் மாவட்ட ஆட்சியர் வினய் தகவல் : வைகை நீர்பிடிப்புப் பகுதிகளில்  மழை பெய்வதால் வைகை அணை நீர் மட்டம்  67 அடியை தொட்டது. மொத்த அடி 71 அடி. அணை 69 அடியை எட்டியதும் வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும். வைகைக் கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கவுமஹ ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல் கூடாது. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்களில் செல்போன் மூலம் 'செல்பி' எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா