முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்ததின கொண்டாட்டங்கள்

குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்தி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்ததின ஆண்டு முழுக் கொண்டாட்டம்













: அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 23, 2021) திறந்துவைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருடம் முழுவதும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் துவக்கமாக இந்த உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத் தகவல் படி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று பிரதமர் மரியாதை செலுத்தினார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுட்டுரைச் செய்தி வாயிலாக பிரதமர் தமது மரியாதையை செலுத்தினார்.உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் 

மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு அவரது 125-வது பிறந்த நாளன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்

நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு கவுகாத்தியில் திரு அமித் ஷா மலரஞ்சலி செலுத்தினார் 

மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு அவரது 125-வது பிறந்த நாளன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு கவுகாத்தியில் திரு அமித் ஷா மலரஞ்சலி செலுத்தினார்

 

அப்போது பேசிய அமைச்சர், புத்திசாலி மாணவராகவும், திறன்வாய்ந்த நிர்வாகியாகவும், தேர்ந்த ஒருங்கிணைப்பாளராகவும், ஒப்பில்லா போர்குணம் கொண்ட தலைவராகவும் நேதாஜி விளங்கினார் என்று கூறினார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு நேதாஜியின் துணிச்சலும், வீரமும் புதிய பலத்தை தந்தது என்று கூறிய திரு அமித் ஷா, சவாலான காலகட்டத்தில் நாட்டின் இளைஞர்களை தமது வசீகர தலைமையின் கீழ் அவர் ஒன்று திரட்டியதாகக் கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக கொல்கத்தா முதல் ஜெர்மனி வரை நேதாஜி பயணம் மேற்கொண்டார். சாலை வழியாக 7,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகவும், நீர்மூழ்கி மூலம் சுமார் 27,000 கிலோமீட்டர்களும் பயணித்து தமது அசைக்கமுடியாத துணிச்சலை அவர் பறைசாற்றினார்.

ஒட்டுமொத்த தேசமும் என்றும் நேதாஜிக்கு கடன்பட்டிருப்பதாக கூறிய உள்துறை அமைச்சர், அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக அறிவித்து, யாரும் செய்யாத புகழஞ்சலியை பிரதமர் திரு நரேந்திர மோடி செய்துள்ளதாக கூறினார்.

இனி வரும் தலைமுறைகள், குறிப்பாக குழந்தைகள், நேதாஜி பற்றி அறிந்துகொள்வதற்காகவும், தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடையும் நோக்கிலும், பராக்கிரம தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார்.உள்துறை அமைச்சகம்

சுபாஷ் சந்திர போஸ் நினைவாக தன்னலமற்ற தொண்டாற்றும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு விருதுகள்

பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். அமைப்பாக இருப்பின் ரூ 51 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும், தனிநபராக இருக்கும் பட்சத்தில் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த வருடத்திற்கான விருதுக்கு, 2020 ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  இது குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டு, 371 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனிநபர் பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மை குறித்த, குறிப்பாக நிலச்சரிவுகள் குறித்த, அறிவியல் ஆய்வுகளுக்கு இந்தியாவில் அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரி ஆவார். சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மற்றும் மூன்று இதர இடங்களில் நிலச்சரிவு குறித்த இந்தியாவின் முதல் ஆய்வகத்தை அவர் உருவாக்கினார்.சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவல் 

“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் நமது தேசத்தை பாருங்கள் வரிசையின் கீழ் 73-வது இணைய கருத்தரங்கை 2021 ஜனவரி 22 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

நேதாஜி குறித்த திறந்தவெளி தளத்தின் ஒருங்கிணைப்பாளரும், செய்தி தொடர்பாளருமான திரு சந்திர குமார் போஸ் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார். இந்திய சமூக ஜனநாயக பேரவையோடு இணைந்துள்ள அவர், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கொல்கத்தா மற்றும் லண்டனில் செயல்பட்டு வரும் ஆய்வு நிறுவனமான நேதாஜி சுபாஷ் ஃபவுண்டேசன் என்னும் அமைப்புடனும் அவர் இணைந்து பணியாற்றுகிறார். ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


ஜனவரி 22 அன்று நடைபெற்ற இணைய கருத்தரங்கில், இந்திய சுதந்திர போரட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய பங்கு குறித்தும், அவரது லட்சியங்கள், தத்துவங்கள் மற்றும் ஒன்றுபட்ட & வளமான இந்தியாவுக்கான அவரது கனவு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இணைய கருத்தரங்கின் காணொலியை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் காணலாம்.தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 

நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்: இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ திரைப்படம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த ஆண்டை நாடு கொண்டாடும் இந்தத் தருணத்தில் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் திரு ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ' திரைப்படம் கோவாவின் பனாஜியில் இன்று (ஜனவரி 23 2021) சிறப்பாக திரையிடப்படுகிறது.

நேதாஜியின் உறுதியான மனநிலையையும், தன்னிகரற்ற சேவையையும் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம தினமாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 

நேதாஜி பற்றிய சிறப்புத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த திருவிழாவின் இயக்குநர் திரு சைத்தன்ய பிரசாத், “இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகவும் போற்றுதலுக்குரிய தேசிய தலைவர்களுள் ஒருவராகவும் உயரிய சக்தியாகவும் நேதாஜி தொடர்ந்து நினைவு கூரப்படுகிறார்”, என்று கூறினார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான திரு சச்சின் கெடேகர் நேதாஜியாக நடித்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடுக்கான சிறந்த திரைப்படங்கள் பிரிவில் தேசிய விருதையும் இந்தத் திரைப்படம் வென்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...