குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில், கூடுதலாக 14 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள்: பழங்குடியின நலன் ர்

 பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில், கூடுதலாக 14 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள்: பழங்குடியினர்


விவகாரங்கள் அமைச்சகம் அறிவிப்பு

கடந்த ஓர் ஆண்டாக முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியால் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரம் குறிப்பாக பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வு பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அத்தகைய தருணத்தில் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப் பொருட்களை, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக விற்பனை செய்யும் முறை அவர்களுக்கு மிகவும் பயனளித்தது. இதனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 14 வன உற்பத்தி சிறிய ரகப் பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலைப்பட்டியலில் சேர்க்கும் வகையில் அதில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றம் குறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே 26 (கூடுதலாக 23 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன)  மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு கூடுதலாக தற்போது மேலும் சில பொருட்களுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்