ஜனவரி 27ஆம் தேதி வி.கே. சசிகலா நடராஜன் விடுதலை செய்யப்படுவார்.

ஜனவரி 27ஆம் தேதி வி.கே. சசிகலா நடராஜன்  விடுதலை செய்யப்படுவார்.
மருத்துவமனையில் இருக்கும் நிலையில்  அவர் விடுவிக்கப்படுவார். காவல்துறை  பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும். கொரானாவிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். வி.கே.சசிகலா நடராஜனுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பெங்களூரில் கூட்டம் கூடவேண்டாமென கர்நாடக மாநிலக் காவல்துறை கூறியுள்ள தகவல்கள் மத்தியில்  தமிழக எல்கையிலிருந்து அமமுகவினர் உற்சாகமான வரவேற்பு அளிக்க ஆயத்தமான

நிலையில். வி.கே.சசிகலா நடராஜன்  உடல் நலத்தில் தொடர்ச்சியாக நல்ல முன்னேற்றமிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளநிலையில், வி.கே.சசிகலா நடராஜனின் விடுதலை குறித்து அமமுக சார்பில்  டி.டி.வி.தினகரன் ட்வீட் வெளியாகியுள்ளது.

அதில்  ‘நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சின்னம்மா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரானா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'. 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில், கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனால், வி.கே.சசிகலா நடராஜன்  27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவாரா என்ற சந்தேகம் பலருக்கும்  எழுந்தது.இச் சூழ்நிலையில் 

சசிகலா நடராஜன் ஆதரவாளர்கள் பல இடங்களில் கட்சிகளில் இருக்கும் நிலையில் அவர் பக்கம் அணி வகுக்க அமைச்சர்களில் பலரும் முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு  எதிராக அணி திரளும் சூழல் உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்களால்  பார்க்கப்படுகிறது.


வி.கே.சசிகலா நடராஜன் விடுதலையானதும் அரசியல்  யுத்தம் துவங்குமென நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் வரும் நிலை 


கொரானா தொற்று காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.கே.சசிகலா நடராஜனுக்கு அறிகுறிகள் குறையத் தொடங்கிய நிலையில் நேற்று மாலை வெளியான அறிவிப்பில் அறிகுறிகள் தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதும். அவரே உணவுகள் உட்கொள்கிறார் எனவும், துணையுடன் எழுந்து நடமாடுகிறார். இதனால் அவரை நார்மல் வார்டுக்கு மாற்ற உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

நாளை ஜனவரி 27ஆம் தேதி சசிகலா நடராஜன்  விடுதலையாவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமமுகவினர் வரவேற்பு ஏற்பாடுகளை பரபரப்பாக செய்துவந்தனர்.தற்போது  மீண்டும் வரவேற்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்

திட்டமிட்டபட ஜனவரி 27ஆம் தேதி (நாளை) சசிகலா விடுதலை செய்யப்படுவார். மருத்துவமனையில் வைத்தே அவர் விடுவிக்கப்படுவார். போலீஸ் பாதுகாப்பு விலக்கிகொள்ளப்படும். கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பெங்களூரில் கூட்டம் கூடவேண்டாம் என கர்நாடக காவல்துறை கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் தமிழக எல்லையிலிருந்து அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

வி.கே.சசிகலா நடராஜன்  விடுதலை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துமென உறுதியாகச் சொல்கின்றனர்.

தினகரன் தொடர்ந்து டெல்லியிடம் பேசிவரும் நிலையில் விடுதலையான உடன் வி.கே.சசிகலா நடராஜன்  பக்கம் 30 ஆதரவு எம்எல்ஏக்கள் வரை வருவார்கள் எனவும் அமைச்சர்கள் நான்கு பேர் வெளிப்படையாகவே ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் பேசப்படுகிறது

 மேலும் ஐந்து அமைச்சர்கள் வரை இந்தப்பக்கமா,  அந்தப்பக்கமா என ஊசலாட்டம் உண்டு என அரசியல் பார்வையாளர்கள் வைக்கும் கருத்தில் அறிய முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்