மருத்துவமனையில் இருந்த நிலைதில் விடுதலையானார் வி.கே.சசிகலா நடராஜன் .

மருத்துவமனையில் இருந்த நிலைதில் விடுதலையானார்  வி.கே.சசிகலாநடராஜன் .


2017 பிப்ரவரி 14 முதல் 4 ஆண்டுகளாக (26/1/2021) முண்னால் முதல்வர் காலம்சென்ற  ஜெ.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இரண்டாம் நபர் வி.கே.சசிகலா தண்டனைக் காலம் முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். வி.கே.சசிகலா நடராஜன்  விடுதலையானதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான வேலைகளில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்சிறைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சசிகலாநடராஜனின் விடுதலை குறித்த ஆவணத்தில் கையெழுத்துப் பெற்றனர். அவரது உடைமைகள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


விக்டோரியா மருத்துவமனையில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு முன்புள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் மருத்துவமனை முன் 

பத்திரிகையாளர்கள் கேட்ட : சின்னம்மா விடுதலையன்று அம்மா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

 டிடிவி தினகரன் : சின்னம்மாவின் வருகையை சென்னையிலும் கொண்டாடுகிறார்கள்

என சாதுரியமாக பதில்தந்தார்

மேலும் அங்கு சிகிச்சை முடிந்து பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு தினம் அன்று வி.கே.சசிகலா நடராஜன்  சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் 65 இடங்களில் வி.கே.சசிகலாநடராஜனுக்கு வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர்.இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை எனும் முழக்கத்துடன்.

இன்று விடுதலை ஆன  நிலையில் செயற்கை ஆக்ஸிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார்  அவர்கள்... உடல் நிலை வழக்கம் போல் சரியாக உள்ளது 

கொரானா முழுவதுமாகக் குணமடைந்துள்ளது .

விடுதலை ஆகும் நேரத்தில் ஸ்கெட்ச் போட முயற்சி  செய்தவங்களுக்கு தெரியவில்லை போல 33 வருடமாக இது மாதிரி எத்தனையோ விஷயத்தை அந்த அம்மா பாத்திருக்காங்க. பலர் எதிர்பார்ப்பின்படி அவர்கள்  27.01.2021 இன்று விடுதலையானார்.

கொரானா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்