தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட அசாமின் பழமையான காதி நிறுவனத்தை புதுப்பிப்புகுறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட அசாமின் பழமையான காதி நிறுவனத்தை புதுப்பிப்பு – கதர் கிராமத் தொழில்கள் ஆணையம்

அசாம் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடோ தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட பழமையான காதி நிறுவனத்தை, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மீண்டும் புதுப்பித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

 அசாம் மாநிலத்தின் பக்‌ஷா மாவட்டத்தில் உள்ள காதி தொழிற் கூடத்தை, போடோ தீவிரவாதிகள் கடந்த 1989ம் ஆண்டு தீ வைத்து எரித்தனர்.  அதை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் பட்டு நெசவு மையமாக புதுப்பித்துள்ளது. இங்கு 15 பெண் கலைஞர்கள் மற்றும் 5 இதர ஊழியர்களுடன் பட்டு நெசவுப் பணிகள், பிப்ரவரி 2ம் வாரத்தில்  மீண்டும் தொடங்கவுள்ளன.

இது குறித்து கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறுகையில், கதர் தொழிற் கூடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காதி பணிகள் மீண்டும் தொடங்குவது, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்’’ என்றார். 

இந்த கதர் தொழிற்கூடம், கவுகாத்தியிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் நிதியதவி மூலம் இந்த தொழிற் கூடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்