மின்சார வாகனங்களுக்கான மாற்று மின்கல தொழில்நுட்பத்துக்கு மாற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் : நிதின் கட்கரி அழைப்பு


சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மின்சார வாகனங்களுக்கான மாற்று மின்கல தொழில்நுட்பத்துக்கு மாற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் : நிதின் கட்கரி அழைப்பு

மின்சார வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், மின்கல தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான முன்னணி நிறுவனங்கள் உருவாக வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். 

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில், லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.  இதன் இருப்புகளை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாம்  தற்போது சவால்களை எதிர்கொள்கிறோம். அதனால், மின்சார வாகனங்கள் துறை, வரும் ஆண்டுகளில் மாற்று தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும் என மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையில் உள்ள உலோகம் - காற்று, உலோக - அயனி மற்றும் இதர ஆற்றல் மிக்க தொழில்நுட்பங்களாக இது இருக்கலாம். .

போக்குவரத்துத் துறையில் தற்சார்பு இந்தியா இலக்கை நாம் அடைய வேண்டும் என கூறியுள்ள திரு நிதின் கட்கரி, சிறப்பு நிறுவனங்கள், தொழில்நுறை, விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், மாற்று மின்கல தொழில்நுட்பத்துக்கு வரும் ஆண்டுகளில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்