காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் பலர் காட்டில் காவலை மீறிப் பொங்கிய கூட்டாஞ்சோறு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான  இராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல்  பொதுமக்களை அணுகிப் பேசியுள்ளார். 

அடுமனைக் கடைகளில் தேனீர் குடித்தார் அதோடு கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலருடன்  ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றவர், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் மூலம் காளான் பிரியாணி தயார் செய்து சாப்பிட்டது காணொலி மூலமாக சமூக வலைத்தளங்களில் நேற்றே வைரலான நிலையில் ஒரு z பிரிவு பாதுகாப்பில் உள்ள அகில இந்தியத் தலைவர் இப்படிக் கிராமத்தில் வீட்டு முறைப்படி செய்யப்படும் சமையலை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிடும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், காளான் பிரியாணி உணவினை கரூர் அருகே அரவக்குறிச்சி ரோட்டில் ஒரு முருங்கைத் தோப்பில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ராகுல்காந்தி சென்று அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். அவர் அந்த இடத்திற்கு செல்லும் போது மிகவும் ஆவலுடன் சென்றார். அந்தக் குழுவினரும் மகிழ்ச்சி பொங்க அவரை வரவேற்க 

சமையல் பணியில் தானும் ஏதேனும் உதவி செய்கிறேன் என ஆர்வமாக ராகுல்காந்தி கேட்க  பிரியாணிக்கு வெங்காய சம்பல் தயாரிக்கும் பணிக்கு உதவியதில் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை தமிழில் எடுத்துக்கூறி பாத்திரத்தில் போட்டதும் 

தயிரை ஊற்றும் போதும் தயிர் என தமிழில் கூறி. கல் உப்பையும் தமிழில் கூறியபடி பாத்திரத்தில் போட்டு அதன்பின்  கரண்டியால் கிளறினார். அதில் ஒரு கரண்டியில்  எடுத்து ருசியும்  பார்த்தார். அது நன்றாக உள்ளதென ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு அங்கிருந்த சமையலர்கள், நீங்கள் தயார் செய்தது தானே என்று கூற. அப்போது ராகுல்காந்தி மகிழ்ந்தார்.

அதன்பின் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த காளான் பிரியாணியை கிளறிவிடுவதைப் பார்த்தவர், சுடச்சுட வெளிவந்த புகையும், வாசனையும் மிக அருமையாக இருப்பதாக கூறி மேலும் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல்  தரையில் விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில்   அமர்ந்திருந்து, சமையல் பணியை மேற்கொண்டு வரும் குழுவினரிடம் அவர்களைப் பற்றிய விவரத்தைக் கேட்டறிந்தார். அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கிராமத்துச் சமையலை செய்ய வேண்டும் எனக்கூறவே அதற்கு அமெரிக்காவில் தனது நண்பர் இருப்பதாகவும், அங்கு சென்று உங்களது சமையலுக்கு  ஏற்பாடு செய்வதாகவும் கூற இதற்கு அவர்கள் நன்றியைப் பதிலுக்குக் கூற தலைவாழை இலையில் காளான் பிரியாணி உணவை ரசித்து உண்டார். மேலும் தமிழகத்திற்கு அடுத்த முறை வரும்போது ஈசல் பிரியாணி செய்து தருமாறு கேட்டார். சுமார் 14 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் காணொலி  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது அவர் எப்போது இந்த இடத்துக்குச் சென்றார்? எப்படிச் சென்றார்? எனவும் அவரது பாதுகாப்புப் படை என்னவானது என்பது எழுவினா

இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. ஆனால் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் இந்த தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக  ரா வைத்திருந்திருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் அவர் இருந்துள்ளார். முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையில் அவர் தனியாக சென்று உணவருந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் காட்சிகளைக் கொண்ட காணொலி  யூ-டியூப்பில் நேற்றுவரை 41 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்திருக்கும் நிலை. 

ராகுல்காந்திக்காக பிரியாணி சமைத்த குழுவைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சின்னக் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.  அனைவரும் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்தவர்கள்.அதில்  சுப்பிரமணியன் எனும் நபர் கூறுகையில், 'ராகுல்காந்தி சாப்பிட வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் வந்தாலும், வரலாம் நீங்கள் உணவை மட்டும் தயார் செய்து கொண்டிருங்கள் சரியான நேரத்திற்கு அழைத்து வந்து விடுகிறோம் என அவரது தரப்பில் இருந்து தெரிவித்ததாகவும் 

அதனால் அவர்கள் ஜனவரி 25 ஆமஹ தேதி காலை 8 மணிக்கே அந்த இடத்திற்கு சென்று சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும். மதிய வேளையில் சமைத்துக் கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ராகுல்காந்தி வந்தார். எங்களுக்கு அவரை கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்த அந்த கூட்டாஞ்சோறு செய்த குழுவினர் . சக நண்பரை போல மிகவும் யதார்த்தமாக எளிமையாக அவர்களிடம் பேசி பழகிய ராகுலைக் கண்டனர் அவர்களுக்கு மேலும் அது உற்சாகத்தை ஏற்படுத்தியது.  அவரைக் கண்டு பதற்றம் அடைந்தாலும். அவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் சகஜமாகவே பேசிப் பழகுவது காணொலி மூலம் காணலாம்  மேலும் அவர்களுக்கு உதவி செய்வதாகவும்  கூறினார். உடன் வந்த பலர் அந்தக் காணொலியில் உண்டு. இனி அடிக்கடி அவர் தமிழ்நாடு வந்து தேர்தல் வரை நன்றாகக் கிழருவார்..சமையலை அல்ல அரசியலை என்பது காணொலி பார்த்த பார்வையாளர்கள் கருத்து. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்