இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை ஆலயங்களில் பணி

இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையில் பணி 


தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்ற இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விண்ணப்பிக்கலாம் தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மற்றும்  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் உள்ளிட்ட பல பணிகளுக்கும்  காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  கடைசி தேதி பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி. இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிக்கையின் படி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மொத்தமுள்ள 63 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 36 இடங்களும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 27 காலிப்பணியிடங்களுமாகும்.  விவரங்களுக்கு tnhrce.gov.in இணையத்தில் பார்வையிடலாம்.

வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை தூத்துக்குடி மாவட்டத்தில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 628215 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் 623 526. ஆகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்