மீண்டும் துவங்கிய விமானப் பயணம் பிப்ரவரி 12 அன்று அதிக பயணிகள் வருகை

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து அதிகளவில் பயணிகள் பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டனர்


2,349 விமானங்களில் 2,97,102 பயணிகள் 2021 பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டதாக விமான போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

2021 மே 25 அன்று உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து இது வரையிலான தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இது தான் அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பான, சிறப்பான மற்றும் விரைவான சேவை ஆகிய காரணங்களால் விமான பயணத்தை மக்கள் விரும்புவதாகவும், இதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை கொவிட்டுக்கு முந்தைய அளவுகளை எட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

2021 பிப்ரவரி 12 அன்று மொத்தம் 4697 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 5,93,819 பேர் விமான நிலையங்களுக்கு வந்திருந்தனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 2020 மார்ச் 24 முதல் நிறுத்தப்பட்ட விமான சேவைகள், 2021 மே 25 அன்று மீண்டும் தொடங்கின.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்