இந்திய பொம்மை கண்காட்சி-2021-ன் இணையதளம் துவக்கம்

ஜவுளித்துறை அமைச்சகம் இந்திய பொம்மை கண்காட்சி-2021-ன் இணையதள
த்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி மற்றும் திரு பியுஷ் கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பிரதமர் விடுத்த அறைகூவலை தொடர்ந்தும், ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம்’ ஆகிய பிரச்சாரங்களை சார்ந்தும், சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய பொம்மை கண்காட்சி-2021 ஏற்பாடு செய்யப்படுகிறது.

2021 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் நடைபெறும் இக்காண்காட்சியின் இணையதளத்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி மற்றும் திரு பியுஷ் கோயல் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு கோயல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்கும் வகையில் தரம்வாய்ந்த பொம்மைகளை உருவாக்கவும், நற்பெயர் ஈட்டவும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு இந்திய பொம்மை கண்காட்சி ஊக்கமளிக்கும் என்றார்.

கல்வி அமைச்சர் திரு நிஷாங்க் பேசுகையில், பொம்மை கண்காட்சியில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 1.27 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெறுவது இதுவே முதல் முறை; இன்று தொடங்கப்பட்ட இணையதளம் நாட்டின் பொம்மை கைவினைஞர்களுக்கு ஒரு மெய்நிகர் தளத்தை வழங்கும் என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தர நிர்ணயக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொம்மைகள் பாதுகாப்பு தரத்தில் தோல்வியடைந்தன என்றும்,

அதன்பிறகு, வெளிநாட்டு பொம்மைகளுக்கான இறக்குமதி வரி 60% ஆக உயர்த்தப்பட்டு, தரக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் கூறினார்.

நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியை ஏற்பாடு செய்ய 6 மத்திய அமைச்சகங்கள் கைகோர்த்துள்ளன. இதற்கான பதிவு செய்யும் தளத்தை இன்று அறிமுகப்படுத்துகிறோம் என்று ஜவுளி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி இரானி கூறினார்.

வர்த்தக அமைச்சகத்தின் உதவியுடன் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன என்று கூறிய அவர், இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல், பாரம்பரிய பொம்மை கைவினைஞர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்படுகின்றன என்றார் அவர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது ஓய்வூதியதாரர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் அச்சங்களை போக்குவதற்காக 20 இந்திய நகரங்களில்,  ஓய்வூதியர்களை சென்றடையும் வகையில் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவைக் கொண்டு காணொலி உரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. யோகா குறித்த இணைய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

கொவிட் பெருந்தொற்றின் போது மின்னணு முறைகளை பின்பற்றி சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டது. மேலும், தபால்காரர்களின் மூலம் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று சான்றிதழை பெறும் சேவையும் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் அனுமதியளிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 3802779 ஆகும். 3118956 பேர் தற்போது பணியில் உள்ளனர். ஓய்வு பெறுதல், ராஜினாமா செய்தல், இறப்பு, பதவி உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள், விதிகளை பின்பற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன..

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்