குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.45,000-ல் இருந்து ரூ. 1,25,000 ஆக உயர்த்தப்பட்டது

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.45,000-ல் இருந்து ரூ. 1,25,000 ஆக உயர்த்தப்பட்
டுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

குடும்ப ஓய்வூதியம் தொடர்பான முக்கிய சீர்திருத்தமாக, குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.45,000-ல் இருந்து ரூ. 1,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்த முடிவு எளிதாக்குவதோடு, போதுமான நிதி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கும்.

பெற்றோர்களின் இறப்பிற்கு பிறகு ஒரு குழந்தை இரு குடும்ப ஓய்வூதியங்களை பெற வேண்டியிருப்பின், அதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அளவு குறித்த விளக்கத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத் துறை அளித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இரு குடும்ப ஓய்வூதியங்களுக்கான அளவு மாதத்திற்கு ரூ. 1,25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், முந்தைய அளவை விட இது 2.5 மடங்கு அதிகம் என்றார்.

பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளிடம் இருந்து பெறப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்