முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு

 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு



.  ஐ.ஜி அந்தஸ்த் அதிகாரிகளில் துவங்கி  ஏ.எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிகள் வரை பலரும் இடமாற்றம்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யான அன்பு, திருநெல்வேலி மாநகரக் காவல்  ஆணையராகவும்,அவர் வகித்த பொறுப்பில், பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஐ.ஜி-யான கணேசமூர்த்தியும் நியமனம். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னரான தேன்மொழி மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி-யாகவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி-யான வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னராகவும்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் கமிஷனரான கண்ணன், சென்னை பெருநகர காவல் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பிலிருந்த தினகரன், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுதாகர் மதுரை சரக டி.ஜ.ஜி-யாகவும், வி.பாலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு பகுதி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் 13 ஆவது பட்டாலியனுக்கும் கமாண்டன்ட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தூத்துக்குடி எஸ்.பி-யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திருநெல்வேலி எஸ்.பி-யாக கிருஷ்ணராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.


ஏப்ரல், 2017-ல் திருப்பூரில் நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களை தாக்கிய புகாரில் சிக்கியவர் அப்போதைய திருப்பூர் ஏ.எஸ்.பி-யான ஆர்.பாண்டியராஜன். இதைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜனுக்கு, பின்னாளில் கரூர் மாவட்ட எஸ்.பி பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் அங்கேயிருந்தும் மாற்றப்பட்டு, பொருளாதார குற்ற விசாரணைப்பிரிவின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். இவரை இப்போது நீலகிரி எஸ்.பி-யாக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகளில் ஆரம்பித்து, ஏ.எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிகள் வரை பலரையும் இடமாற்றம் செய்திருக்கிறது அரசு.

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருந்த அன்பு, திருநெல்வேலி மாநகர ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார். அவர் வகித்து வந்த பொறுப்பில், பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஐ.ஜி-யான கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னரான தேன்மொழி அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி-யாக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் கமிஷனரான கண்ணன், சென்னை பெருநகர காவல் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பிலிருந்த தினகரன், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுதாகர் மதுரை சரக டி.ஜி.ஜி-யாகவும், வி.பாலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு பகுதி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் 13 ஆவது பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தூத்துக்குடி கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திருநெல்வேலி எஸ்.பி-யாக கிருஷ்ணராஜும்

ஏப்ரல், 2017 ஆம் ஆண்டில் திருப்பூர்  டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களைத் தாக்கிய புகாரில் சிக்கிய அப்போதைய திருப்பூர் ஏ.எஸ்.பி-யான ஆர்.பாண்டியராஜன்.  தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த  பாண்டியராஜனுக்கு, கரூர் மாவட்ட எஸ்.பி யாக பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் அங்கிருந்தும் மாற்றப்பட்டு, பொருளாதார குற்ற விசாரணைப்பிரிவின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். இவரை இப்போது நீலகிரி எஸ்.பி-யாக  மாற்றம் செய்திருக்கிறது.



அடையாறு துணை ஆணையராக இருந்து கரூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட பகலவன், மீண்டும் சென்னை மாநகரத்துக்குள் வருகிறார். அவருக்குத் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சரவணன், போலீஸ் பயிற்சி பள்ளியின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய துணை ஆணையராக வி.ஆர்.ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றத்தின்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்குள் மட்டும் ஒன்பது அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் இரண்டு கூடுதல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள், இரண்டு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர்கள், ஒரு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் என சென்னை காவல்துறை மொத்தமாகவே மாற்றமடைந்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...