ஆசியான் இந்தியா ஹேக்கத்தான்: மத்திய கல்வியமைச்சர் தொடங்கிவைத்தார்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆசியான் இந்தியா ஹேக்கத்தான்: மத்திய கல்வியமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ தொடங்கிவைத்தார்

ஆசியான் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடல்சார் பொருளாதாரம், கல்வி ஆகிய இரண்டு பெரிய கருப்பொருள்களில் ஆசியான் நாடுகளும் இந்தியாவும் சந்தித்து வரும் பொதுவான சவால்களுக்கு இந்த ஹேக்கத்தானில் தீர்வு காணப்படும் என்றும்,  கல்வி, அறிவியல், தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்த நாடுகளின் பொருளாதார, கலாச்சார உறவு மேன்மை அடைவதற்கான வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். கவுரவம், பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம், புதுமை ஆகிய ஆறு அடிப்படை நல்லொழுக்கங்களை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் கூறினார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்வி கொள்கை 2020, இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்