முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்ததாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை

பிரதமர் அலுவலகம்  சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்ததாளில், அன்னாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை






செலுத்தினார்.

டிவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், ‘‘பாரத தாயின் புதல்வன் சத்ரபதி சிவாஜி மகராஜை, அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்.

சிவாஜி மகராஜின் வெல்லமுடியாத  தைரியம், அற்புதமான வீரம் மற்றும் அசாதாரண நுண்ணறிவு ஆகியவை, நாட்டு மக்களை ஆண்டாண்டு காலத்துக்கும் ஊக்குவிக்கும். ஜெய் சிவாஜி!’’ என குறிப்பிட்டுள்ளார். சிவாஜி ராஜே போன்சலே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.

சிவாஜி மகாராஜாவின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய பேரரசின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் பேரரசால் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்குவதிலும் , ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது. இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.

நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களுக்கு யுத்தத்தின்போது கொடுமை செய்தல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார்.

பிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள். சுமார் 3,௦௦0 பிஜப்பூர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்சல்கானின் இரு மகன்களும், இரண்டு தளபதிகளும் சிறை பிடிக்கப்பட்டனர். பீஜப்பூரின் முஹம்மது அதில்ஷா அதற்கு சளைத்தவர் அல்ல. மிகப்பெரிய படை ஒன்றை ஒன்று திரட்டி இராணுவத்தளபதி ரஸ்டம் ஜமான் தலைமையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தினார். வருடம் 1659 கோல்ஹாபூர் யுத்தம் தொடங்கியது. போரின் முடிவில் இராணுவ தளபதி உயிர் பிச்சை கேட்டு தப்பித்து ஓடினார். அதில்ஷாக்கு இறுதியில் ஒரே ஒரு வெற்றி மட்டும் கிடைத்தது. பண்ஹாலா கோட்டையை சிவாஜி அடையும் முயற்சியை வருடம் 166௦ ல் தளபதி சித்திக் முறியடித்தார். இதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1673ல் சிவாஜி பண்ஹாலா கோட்டையை அடைந்தார்.

சிவாஜியின் பீஜப்பூர் சுல்தானுடனான மோதல்களும் தொடர் வெற்றிகளும் மொகலாய சக்கவர்த்தி ஔரங்கசீப் கவனத்திற்கு வந்தது. ஔரங்கசீப் ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு சிவாஜி பெரும் தடையாக அமைவார் என்று எண்ணினார். இதற்கிடையில் வேறொரு வகையில் பிரச்சினை வந்தது. சிவாஜியின் தளபதி மற்றும் சில படை வீரர்கள் அகமத்நகர் மற்றும் ஜூன்னார் அருகில் உள்ள சில மொகலாய பிரதேசங்களின் பகுதிகளுக்கு சென்று பெரியளவில் கொள்ளையடித்து வாரிசூருட்டி கொண்டு வந்தனர். ஔரங்கசீப் மழைக்காலம் என்பதால் டெல்லி கோட்டையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அதலால் தன்னுடைய தாய் மாமனும், டெக்கான் பகுதியின் கவர்னருமான ஷாயிஸ்தாகானை சிவாஜியின் கதையை முடித்து கட்ட நியமித்தார்.

ஔரங்கசீப் சக்தி வாய்ந்த மன்னர்களுள் ஒருவர். அவரது படை அளப்பரியது. ஷாயிஸ்தாகானின் படை மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி சிவாஜியின் பல கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சிவாஜியின் தலைநகரான பூனாவையும் சேர்த்து இழந்தார். சிவாஜி மீண்டு வந்து நடத்திய பதில் தாக்குதல்களில் ஷாயிஸ்தாகான் படுகாயமடைந்தார். பூனா காப்பாற்றபட்டது. ஷாயிஸ்தாகான் ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு பிறகு பல முனை தாக்குதல்களை நடத்தி கொங்கன் பகுதிகளில் சிவாஜியின் பலத்தை பன்மடங்கு குறைத்தார்.

இதற்கு பதிலடியாக சிவாஜி இரவு நேரம் ஒன்றில் மொகலாயர்களின் வர்த்தக தலைநகரான சூரத்’தில் புகுந்து அதன் பெரும் வளங்களை கொள்ளையடித்து புறப்பட்டார். கடுங்கோபம் அடைந்த ஔரங்கசீப் தனது தளபதி ஜெய் சிங் தலைமையில் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களுடன் சிவாஜியின் ராஜ்ஜியத்தின் மேல் தாக்குதல் நடத்த ஆணையிட்டார். சிவாஜியின் கோட்டைகள் பறிபோனது, வளங்கள் உருவப்பட்டன, வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேல் இழப்புகளை தடுக்கும் பொருட்டு சிவாஜி சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார். புரந்தார் ஒப்பந்தம் தளபதி ஜெய் சிங்’கிற்கும் சிவாஜிக்கும் கையெழுத்தான வருடம் 1665. சிவாஜி தன்னுடைய 23 கோட்டைகளையும் அளித்து 400,000 பணத்தையும் நஷ்ட ஈடாக மொகலாயர்களுக்கு அளித்தார்.

ஔரங்கசீப் சிவாஜியை ஆக்ரா வர சொல்லி அழைத்தார். தன்னுடைய படைகளை கொண்டு ஆப்கானிஸ்தான் பகுதிகளை மேம்படுத்த அழைப்பு விடப்பட்டது. தன்னுடைய எட்டு வயது மகன் சம்பாஜியுடன் சிவாஜி ஆக்ரா பயணித்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார். சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது.மொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்’ பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால்  தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப்  யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார். மராத்திய சாம்ராஜ்ய பேரரசராக ஜூன் 6, 1674 அன்று ராய்காட்’டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), 😳சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (இந்து தர்மத்தை நிலை நிறுத்துவுவபர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.

மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமையவேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...