உலங்கு வானூர்தி ஊழலில் அனூப்குமார் குப்தாவைக் கைது செயத அமலாக்கத்துறை


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனூப் குப்தா கைது  அமலாக்கத்துறை நடவடிக்கை. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்குத் தொடர்பாக 

வெளிநாட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் 12 வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான  ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழவே

இது இந்தியா கேட் பாஸ்மதி அரிசியை தயாரிக்கும் கே.ஆர்.பி.எல் நிறுவன இயக்குனரும், தொழில் அதிபருமான அனூப் குமார் குப்தா 3,600 கோடிக்கு ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட அனூப் குப்தாவை ஐந்து நாட்கள் அமலாக்கத்துறைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய மற்றொரு  இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கமிஷன் பணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாங்கிய சொத்துக்களை முடக்கும் முயற்சியில் சிபிஐ, அமலாக்கத்துறை ஏற்கெனவே  இறங்கியது. விவிஐபி.க்களின் பயணத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை, ரூ.4,500 கோடிக்கு வாங்க கடந்த 2010 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் உட்பட மூன்று  நபர்கள் இடைத் தரகர்களாகச் செயல்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் ரூபாய்.423 கோடி கமிஷனாக பெற்று பலருக்கும் பகிர்ந்து அளித்துள்ளனர். கிறிஸ்டியன் மைக்கேல் மட்டும் ரூ.225 கோடி கமிஷன் பெற்றுள்ளார்.  ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டு இரத்தும் செய்யப்பட்டது.   தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிற நிலையில் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கடந்த மாதம் நான்காம் தேதி கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் உள்ள தனது எப்.இசட்.இ குளோபல் சர்வீஸஸ் நிறுவனம் மூலம், டெல்லியில் அவர் ஏற்படுத்திய போலி மீடியா நிறுவனம் ஒன்றுக்கு இந்தியர்கள் இருவருடன் சேர்ந்து பணத்தை அனுப்பியுள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. கிறிஸ்டியன் மைக்கேலுக்கு நான்கு நாடுகளில் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் உள்ளது. இந்த சொத்துக்கள் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்டுள்ளன.  கிறிஸ்டியன் மைக்கேலுக்கு பினாமி பெயரில் இந்தியாவிலும் சொத்துக்கள் இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகித்து கடந்த 2015 ஆம் ஆண்டு கிறிஸ்டியன் மைக்கேலுடன் தொடர்புடைய டெல்லியில் உள்ள ரூபாய் .1.12 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முன்பு  முடக்கியது. இவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கும் முயற்சியில் விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு இதற்காக இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை விசாரணை அமைப்பு நாடியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்