முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரிந்த அணிகள் ஒன்று சேராமல் வெற்றி கைகூடாது இது அதிமுக கள நிலவரம்










ஆட்சி அதிகாரம் இல்லை யென்றால் அதிமுகவை வழிநடத்த இப்போதுள்ள நபர்களால் முடியுமா? முடியாதா? என்பது தான் பலரது கேள்வி  ஆதாரங்களின் அடிப்படையில்  ஆராய்ந்து பார்த்தால் முன்னால் முதல்வர் காலஞ்சென்ற. ஜெ.ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவின் வாக்கு வங்கி

40.88 சதவீதமாகும்மொத்தம் பெற்ற  வாக்குகள் 176,17,060 ஆகும் 

தற்போது முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமி  மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமை  அதிமுகவின் வாக்கு வங்கி

18.48 சதவீதம் ஆகும் மொத்த வாக்குகள் 78,30,520 ஆகும்

சரிவு

40.88-18.48 =22.40 சதவீதம் 

இது வாக்குகளின் படி பார்த்தால் 

176,17,960 - 78,30,520 =97.86.540 ஆகும். இரட்டைத் தலைமையில்

மாயமாய் மறைந்துவிட்ட

வாக்கு வங்கி 22.40 சதம்  ஏறக்குறைய

98 இலட்சம் வாக்குகள் காணவில்லை 

திமுகவில் பிரிந்து அதிமுக  உருவாக்கப்பட்டு நிறுவனர் காலமான பின் வளர்ச்சி  மற்றும் வளர்த்

தெடுத்த விதம் கட்சிக்கொடியுடன்  இரட்டை இலை சின்னம் எல்லாம் இருந்து

எங்கே போனது அதிமுகவின்

வாக்கு வங்கி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் 

தேர்தலில் பல முறை  நீதிமன்றம் 

சென்று  சுயேட்சைச் சின்னம் வாங்கி

அதை பத்து நாட்களில் மக்களிதம்  பரப்பியதுடன்  பரிசு

பெட்டி பட்டனை  மக்கள் இவிஎம் இயந்திரத்தில்

கண்டு பிடிக்கவே கஷ்டப்பட்டு இப்படி பல சோதனை  கடைசி

யாக டி.தி.வி.தினகரன் எடுத்த வாக்கு

5.25 சதவீதம் மொத்த வாக்குகள் 22.25 இலட்சம்

22 தொகுதிக்கான இடைத்தேர்தலில்

3.19 இலட்சம் வாக்குகள் 7.23 சதவீதம் நடந்து

முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 18 சதவீதம் 

டி.டி.வி.

தினகரன் வாங்கிய அனைத்து 

வாக்குகளும் அதிமுக வாக்குகள்.இது தற்போதய முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு  எதிரான

வாக்குகளாக இருக்கலாமே தவிர அவை  அத்தனையும்

அதிமுகவின்  வாக்குகள்

தினகரனை அஞ்சரை சதவிகிதததில்

தடுத்து நிறுத்தி எடபபாடி 18% எடுத்து

தன்னை ஒரு தலைவராக நிரூபித்து

விட்டார் என்று பரப்புரை செய்கிறார்கள்.

அரசியலுக்கு ரஜினி 

வந்தால் அப்படியே புரட்டி போட்டு

விடுவாரென்று கதை விட்டபலர்  இப்போது காணவில்லை.

அதிமுக என்று வரும் போது முன்னால் முதல்வர் காலம்சென்ற  ஜெ.ஜெயலலிதா  விட்டுச்சென்ற

வாக்கு வங்கிக்கும் தற்போதய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டனிக்கட்சிகள் ஆதரவுடன் 

வாங்கியிருக்கும் வாக்கு வங்கிக்கும்

என்ன வித்தியாசம் என்பதை மறைத்து பலர் விவாதம் செய்வது அவர்களின் அரசியல் அறியாமை.

உண்மையை சொல்லப்போனால் அதிமுகவுக்கு இழப்பு

22.40 சதவிகிதம்.தினகரனால் இலாபம்

5.25 சதவிகிதம்

70 ஆண்டு கால திமுகவின் 

வரலாற்றில் ஒரு சுயேட்சையிடம்

டெபாசிட்டை பறிகொடுத்த "குக்கர்"

சின்னம் மீண்டும் தற்போது டி.டி.வி. தினகரனுக்கு கிடைத்

திருக்கிறது. 

நான்காண்டு கால சிறைவாசத்துக்குப்

பிறகு வெளிவந்த வி.கே. சசிகலாநடராஜன் ஒன்றும்

இராமாயணம் வாசிக்கச் சொல்லி 

கேட்டு பொழுதை களிக்கப்போவதில்லை

அவரும் களத்தில் இறங்குகிறார்

அவர் முப்பதாண்டு 

காலம் அரசியல் சாணக்கியனான முன்னால் முதல்வர் காலம்சென்ற மு.கருணாநிதி

க்கே தண்ணிர் காட்டிய சசிகலா நடராஜனுக்கு ஒன்றும் புதிதல்ல

இதில் தான் தற்போது அரசியல் கணக்கு துவங்கியிருக்கிறது.கட்சியில் எந்தப் பொறுப்பை வாங்க வேண்டும்; வாங்கிய பொறுப்பை வைத்து என்ன செய்ய வேண்டும்; செய்ததை எப்படிச் செய்தியாக்க வேண்டும்; செய்தியை எப்படிப் பரபரப்பாக்க வேண்டும்; அந்தப் பரபரப்பால், உடனே நிகழப்போவது என்ன? எதிர்காலத்தில்  பலனாக விளையப்போவது என்ன... என்றெல்லாம், நடராஜன் சசிகலாவுக்குச் வகுப்பெடுத்தார். சசிகலா நடராஜன், அதை  முன்னால் முதல்வர்  ஜெ.ஜெயலலிதாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...