பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

இந்திய மருந்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம், சென்னை - 106

பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
[சுயநிதி கல்லூரிகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்]

2020-21ம் ஆண்டுக்கான கலந்தாய்வு கூட்டம் [22-02-2021 to 24-02-2021]

19 சுயநிதி இந்திய சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி (BSMS, BAMS & BHMS) மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கம், அறிஞர் அண்ணா மருத்துவமனையில் உள்ள    இந்திய மருந்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் தேர்வு குழு அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறவுள்ளது.  

சுயநிதி கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள்.

சித்தா கல்லூரிகளில் 8 இடங்களும், ஆயுர்வேத கல்லூரிகளில் 2 இடங்களும், ஹோமியோபதி கல்லூரிகளில் 9 இடங்களும் என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

(1) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்:

               ஆயுஷ் அமைச்சகத்தின் கொள்கை முடிவுப்படி, 2020-21-ம் கல்வி ஆண்டு முதல், தமிழக சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் இந்திய மருந்து இயக்குனரகத்தின் தேர்வு குழு கலந்தாய்வு நடத்துகிறது. இந்த பிரிவுக்கு அதிக மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும். இந்த இடங்கள் நிரப்பப்படாவிட்டால், அது மாநில நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுடன் மாநில அரசின் விதிமுறைகள் படி இணைக்கப்படும்.

பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் : 502

தகுதியான மொத்த விண்ணப்பதாரர்கள்  : 483

சுயநிதி கல்லூரிகளில் உள்ள படிப்பு/ இடங்களின் எண்ணிக்கை:

சித்தா - 67

ஆயுர்வேதா -10

ஹோமியோபதி - 108

மொத்தம் - 185

(2) நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்:

பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் : 1400

தகுதியான விண்ணப்பதாரர்கள்: 1301

சுயநிதி ஐஎஸ்எம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள படிப்புகள் / இடங்கள்

சித்தா - 132

ஆயுர்வேதா - 18

ஹோமியோபதி - 239

மொத்தம் 389

இத்தகவல், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் நீட் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்