இளைஞர் படுகொலை திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே பரமசிவம். மகன் சிதம்பர செல்வம் எனும் கோழி (வயது 23), கூலித் தொழிலாளி. நேற்று அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய உறவினர்களான முருகன் மகன்கள் பாலாஜி (வயது39), இராமையா (வயது37) ஆகியோருடன் இடுகாட்டுப் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பாலாஜியின் குடும்பத்தினரைப் பற்றி சிதம்பர செல்வம் அவதூறாக பேசியதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த பாலாஜி, இராமையா ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் சிதம்பர செல்வத்தின் கழுத்தில் வெட்டினர். மேலும் ஆத்திரத்துடன் கொடூரமானவர்கள், கசாப்புக் கடை ஆட்டை அறுப்பது போல சிதம்பர செல்வத்தின் கழுத்தை அறுத்து தலை துண்டிக்கப்பட்டவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகொலை செய்யப்பட்ட சிதம்பர செல்வத்தின் தலையைத் தனியாக துண்டித்து எடுத்த பாலாஜி, இராமையா இருவரும், அந்தத் தலையுடனும், இரத்தம் தோய்ந்த அரிவாள்களுடனும் தாழையூத்து காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்ததையடுத்து அவர்கள் இருவரையும் பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த அரிவாளையும் பரிமுதலாக்கி காவல்துறை பாதுகாப்புடன் கூட்டிச்சென்று இதுவரை சிதம்பரசெல்வத்தின் தலையை அவரது உடல் இருந்த இடத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட சிதம்பரச்செல்வத்தின் உடலை காவல்துறை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்து கைதான பாலாஜி, இராமையா ஆகிய இருவரிடமும் பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
கருத்துகள்