அரசு இயக்கக் கூடாது-. ஆக்ஸிஜன் உற்பத்தி, ஆலையில் எந்திரங்களை உபயோகப்படுத்தும் நிபுணத்துவம் எங்களிடமே உள்ளது . ஸ்டெர்லைட் நிர்வாகம்
நீதிமன்றத்தில் நிர்வாகம் முறையீடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இயக்கக் கூடாது- ஆலை நிர்வாகம் . ஆக்ஸிஜன் உற்பத்தி, ஆலையில் எந்திரங்களை உபயோகப்படுத்தும் நிபுணத்துவம் எங்களிடமே உள்ளது . ஸ்டெர்லைட்

ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாமே என தெரிவித்த உச்சநீதிமன்றம் . தமிழக அரசே தயாரிக்கலாமே என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் ஆலை நிர்வாகம் ஆட்சேபம். ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தியை செய்யலாமே என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்து நடத்தி முடித்த பிறகு
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம். ஸ்டெர்லைட்டை திறப்பது அரசு நோக்கமல்ல.. ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் அனுமதிக்கலாமென முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கூட்டம் கூடியது ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க 4 மாத காலத்திற்கு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு . தற்போது காபந்து அரசு நடந்து கொண்டிருக்கிறது.. எந்த முக்கிய முடிவையும் முதல்வரால் எடுக்க முடியாது. ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பது குறித்து மாநில அரசின் கருத்துக்கள் தர வேண்டும் என நீதிமன்றம் சொன்னது, தலைமை செயலக அதிகாரிகள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலில் முதல்வர் விவாதித்து ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் ஆளும் அரசுக்கு ஏற்கனவே கெட்ட பெயர் மேலும் இந்த ஆலையை மூடியதே அதிமுக அரசுதான் என்பதால், மறுபடியும் எப்படி நாமே திறப்பது. ஆலையை திறப்பதால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஐயம் இந்த விஷயத்தில் நாமளே ஒரு முடிவு எடுத்தால்தானே தவறு அனைத்து கட்சிகளின் ஆலோசனையும் கேட்டு பெற்றால், அதன்படி முடிவெடுத்தால் அது நல்லது என்ற ரீதியில் ஆலோசனை
திமுக தரப்பில், இது மக்களின் உயிர் பிரச்சனை, ஆக்ஸிஜன் விஷயத்தில் அரசியல் செய்தால், உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும்.. மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி எதிர்க்கட்சிகள் தான் காரணமாக இருந்துவிட்டார்கள் என்று நாளை அதிமுக தரப்பே திமுக பக்கம் பழியை திருப்பி, காரணம் சொல்லிவிடலாம் என்பது போன்ற ஆலோசனைகளையும் திமுகவும் நடத்தியதாம். அனைத்து கட்சி கூட்டத்திலும் அமமுக, நாம் தமிழர்,மநீம கட்சிகள் பங்கேற்கவில்லை தமிழக முதல்வர் தமிழ்நாட்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாத காலத்திற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பரிசீலித்துள்ளது. அதாவது அதன் தொழில்நுட்ப உதவி அரசாங்க மின் உதவியில் ஆக்சிஜன் உற்பத்தி நான்கு மாதங்கள் மட்டுமே. பெரும்பாலும் காற்று மண்டலத்தில் இருந்துதான் ஆக்ஸிஜன் சேகரிக்கப்படுகிறது. ஆனால், இதற்கான முறை மிகச் சிக்கலானது. "ஆக்சிஜனை உற்பத்தி செய்ய காற்று மண்டலத்தில் உள்ள காற்றை எடுத்து, சுத்தப்படுத்தி உயர் அழுத்த கலன்களுக்குள் கொண்டுசெல்ல வேண்டும்.
அப்படிக் கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் வெகுவாக குளிர்விக்கப்படும். இதனால், கொள்கலனில் உள்ள ஆக்சிஜன் ஒரு கட்டத்தில் திரவமாக மாறும். அப்போது அதன் வெப்பநிலை 195 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருக்கும். ஆக்சிஜனுக்கும் நைட்ரஜனுக்கும் வெப்பநிலையில் 5 டிகிரி வித்தியாசம் இருக்கும்.
இந்த நிலையில், ஃப்ராக்ஷனல் டிஸ்டிலேஷன்என்ற முறையில் ஆக்சிஜனும் நைட்ரஜனும் வெவ்வேறு வெப்பநிலையில் பிரித்து எடுக்கப்படும். அந்த ஆக்சிஜன் பிறகு சிலிண்டர்களிலோ, டேங்கிலோ சேர்த்து வைக்கப்படும். டேங்கில் என்றால் திரவ வடிவில் இது சேகரிக்கப்படும். சிலிண்டர்களில் வாயு வடிவில் சேகரிக்கப்படும்" என்கிறார் தமிழ்நாடு ஆக்சிஜன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளரும் தமிழ்நாடு ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருமான ஆர். கண்ணன்.
இப்படி உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மிகக்மிகக் குறைந்த வெப்பநிலையில் தான் தொடர்ந்து சேமிக்கமுடியும் என்பதால், இரண்டு வால்வுகள் கொண்ட இரட்டை அடுக்குகளால் ஆன கொள்கலன்களில்தான் சேமிக்கவோ, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லவோ முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறிதும் பெரிதுமாக 18 விருந்து 19 நிறுவனங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இதில் ஏழு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
இதில் மூன்று நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை சப்ளை செய்கின்றன. பல பெரிய உலோக தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், அவர்களே உற்பத்திசெய்து கொள்வார்கள்.
தொழில்துறை - மருத்துவ ஆக்சிஜன் வித்தியாசம் இருக்கிறது
தொழில்துறைக்கும் மருத்துவத்திற்கும் ஒரே மாதிரியான ஆக்சிஜன்தான் பயன்படுத்தப்படுகிறது. "ஆனால், மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் என்றால், சில பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அவற்றை மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும். மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனில் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவை இருக்கக்கூடாது. 99 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும்." என்கிறார் ஆர். கண்ணன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 300 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதில் 30 சதவீதம் மருத்துவத்திற்கும் மீதமுள்ள 70 சதவீதம் தொழில்துறைக்கும் செல்லும். இப்போது மருத்துவத்திற்கு பெருமளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால் தொழில்துறைக்கு ஆக்சிஜன் அளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவனைகளுக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கும்.
கொரோனாதடுப்பூசி பற்றாக்குறை சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கும், பாரத் பயோ டெக்குக்கும் சுமார் ஒரு லட்சம் கோடி லாபம் கிடைப்பதற்கு வழிவகுத்துள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வழி செய்கிறது.
கொரோனா சிலருக்கு லாபம் ஈட்டும் வணிகக் கதை,
நமக்கோ உயிரின் வாதை
காப்பர் உற்பத்தி செய்த ஆலையில் ஆக்ஸிஜன் உடனடியாக உற்பத்தி செய்ய முடியுமா? அறிவியல் படித்தவர்கள் உடனடியாக பதில் சொல்ல வேண்டிய நிலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு நான்கு மாதங்கள் என்பது ஒட்டகம் கூடாரம் கதையாகவே முடியும் அந்தத் தொகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே புரிந்து விட்டது இடையில் நீங்கள் யார் என்ற திருவிளையாடல் பட உரையாடல் நினைவு வந்தால் அதுவே இங்கு பொதுநீதி அதாவது இன்னும் புரியவில்லை என்றால் சத்தியவான் உயிர் மீட்க சாவித்திரி தற்போது குழந்தை வரம் பெற்று விட்டார். மற்றவை தானாக வரும் என்ற நிலை தான்.
கருத்துகள்