முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மே 25 ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மே 25 ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும்



: மத்திய அரசு வேண்டுகோள்

12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் தொழிற் கல்வி நுழைவு தேர்வுகள் நடத்துவது குறித்து விவாதிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் தேசியளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் சார்பில் தேசியளவிலான ஆலோசனைக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த கூட்டத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே, உயர் கல்வித்துறை செயலாளர் திரு. திரு அமித் காரே, பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி அனிதா கர்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆலோசிக்க, உயர்நிலைக் கூட்டம் பிரதமர் தலைமையில் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில் கேபினட் அமைச்சர்கள் 9 பேர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த கூட்டம் நடந்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முதல் முக்கியத்துவம் அளிப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கல்வி அமைப்பின் சுமூகமான செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய ஒட்டு மொத்த நாடும் ஒன்றாக இணைந்து வருகிறது என அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வேலைகளை தீர்மானிப்பதில் 12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் ஆலோசித்தார்.  தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, உள்ளீட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் 12ம் வகுப்பு தேர்வு முக்கியம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினருடனும் நடத்தப்பட்ட ஆலோசனை, மாணவர்களின் நலன் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேர்வுகள் குறித்தும் பொருத்தமான முடிவு எடுக்க உதவும் என திரு ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்தார்.  

இரண்டு விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 12ம் வகுப்புக்கு சிபிஎஸ்இ மற்றும் இதர மாநிலங்களின் வாரிய தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் படிப்புகளுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

தேர்வு முறை, நடைமுறை, தேர்வு நடத்தும் நேரம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஒருமனதான முடிவு இருந்தாலும், இந்த விஷயத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆலோசித்து தங்கள் கருத்துக்களை மே 25ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தேர்வு நடத்தும் திட்டம் குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், தங்கள் கருத்துக்களை கல்வி அமைச்சகத்துக்கு மே 25ம் தேதி செவ்வாய் கிழமைக்குள் தெரிவிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து ஆலோசனைகளையும் ஆலோசித்து, 12ம் வகுப்புக்கு தேர்வு நடத்தும் விஷயத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் விரைவில் இறுதி முடிவு எடுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...