கொவிட்-19 தடுப்பு மருந்து 20.25 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் குறித்த சமீபத்திய தகவல்கள்: 20.25 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.25 கோடியை (20,25,29,884) கடந்துள்ளதாக இன்று மாலை 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கை தெரிவிக்கிறது.

18 முதல் 44 வயதுடைய 8,31,500 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் மூன்றாவது கட்டம்

தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 1,38,62,428 பயனாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 4,11,297 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 10,680 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை வழங்கப்பட்டுள்ள 20,25,29,884 டோஸ்களில் 98,08,901 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ் தடுப்பு மருந்து, 67,37,679 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்து, 1,52,42,964 முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ் தடுப்பு மருந்து, 84,00,950 முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்து, 18 முதல் 44 வயது வரை உள்ள 1,38,62,428 பேருக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ் தடுப்பு மருந்து, 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 6,26,09,143 பேருக்கு வழங்கப்பட்ட முதல் டோஸ் தடுப்பூசி, 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 1,01,11,128 பேருக்கு வழங்கப்பட்ட இரண்டாம் டோஸ் தடுப்பூசி, 60 வயதுக்கு மேற்பட்ட 5,73,45,128 நபர்களுக்கு வழங்கப்பட்ட முதல் டோஸ் தடுப்பு மருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட 1,84,11,563 நபர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்து அடங்கும்.

தடப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் 131-வது நாளான இன்று, மொத்தம் 17,19,931 டோஸ்கள் வழங்கப்பட்டன. இதில் 15,76,982 பயனாளிகள் முதல் டோசையும், 1,42,949 பயனாளிகள் இரண்டாவது டோசையும் பெற்றுக்கொண்டதாக தற்காலிக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி அறிக்கைகள் இன்று பின்னிரவு நிறைவு செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா