முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கு வங்காளத்தில் 33 நாட்கள் தேர்தலில் எதிரொலி கலவரம் பதில் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் 33 நாட்கள்







,8 கட்டங்களாகத் தேர்தலில் பிரதமர், 22 மத்திய மந்திரிகள்,6 முதலமைச்சர்கள், மத்திய ஏஜென்சிகள் கோப்ரா (மிதுன்) 10,000 மத்திய ராணுவப்படை, அதைவிடவும் அதிகம் பணம் தண்ணீர்போல் வாரி இறைக்கப்பட்டது, ஊடகங்கள் அனைத்தும் பாஜக  ஆதரவாக செயல்பட ஒரு டசனுக்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள்,

294 மண்டலங்களிலும்  விட்டெறிந்த பணக்கட்டு 600 க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், சொந்தக் கட்சியிலிருந்து நேரம்பார்த்து பாஜக வுக்கு தாவிய தலைவர்கள்,

இதெல்லாம் போதாதென்று  கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடிய வகுப்புவெறி வன்முறை

ஹவாய் சப்பல் அணிந்த எளிமையின் மறு உருவமான ஒரு பெண் வீராங்கனையாக மம்தா பானர்ஜி,

அப்படியிருந்தும் ஆட்சியை பாஜக கைப்பற்றமுடியாமல்

மீண்டும் அவரே முதல்வரானார் .மேற்கு வங்காளத்தில் மம்தாவின் தொண்டர்கள் பாடமெடுத்து ஆடி வருகின்றனர், கடந்த  நான்கு நாட்களாக பாஜக தலைவர்கள் பலபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, பாஜக நிர்வாகிகளின் வீடுகள் கடைகள் சூறையாடப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தில் பாஜக வை வங்காளிகளின் எதிரி எனவும் பாஜக வினரை இனத் துரோகிகள் எனவும் பிரகடனம் செய்யப்பட்டு, அனைத்துக் கொலைகளும் வன்முறைகளும் பொது மக்களின் கண் முன்னே பொது மக்களின் ஆதரவுடனேயே நடந்தேறின என்பது திகிலான செய்தி, உக்கிரமாக கலவரம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் மம்தா வின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒட்டு மொத்த கலவரமும் நொடிப் பொழுதில் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பியதும் ஆச்சர்யம் தான்.குறிப்பாக தெற்கு கொல்கத்தா காந்திநகர் பகுதியில் ஒரு பாஜக தலைவரை 4 பேர் கொண்ட கும்பல அடித்து பெட்ரோல் ஊற்றி எரிக்க தீக்குச்சியை பற்ற வைக்கும் பொழுது மம்தாவின்ன் அறிவிப்பு வரவே, அந்தக் கும்பல் பாஜக தலைவரை எரிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். அனைத்து வன்முறை சம்பவங்களும் வீடியோ பதி செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறதும் பயம் கலந்த சோகம் தான். மம்தா பானர்ஜி பாஜகவுக்கு சொல்ல நினைத்த செய்தியை சொல்லி விட்டார்."என்னை சீண்டினால் ஆபத்து" என்பதே அந்த செய்தியாக இருக்க கூடும்... தான்தோன்றித் தனமாக அராஜக போக்கை கையிலெடுத்து ஆணவத்தில் ஆடியதற்கு இதெல்லாம் தேவை தான் என மக்களின் கூட்டு மனசாட்சி மம்தாவுக்கு ஆதரவாக நிற்கிறது.சாது மிரண்டாலே காடு தாங்காது, பாஜக வினர் வம்பு வளர்ப்பதோ வங்கத்தின் பிராந்திய சக்திகளிடம். தாங்குவார்களா?  மையம் தேசியம் எனும் பெயரில் மண்ணின் மைந்தர்களை அடக்கி ஒடுக்க நினைத்தால் இது தான் நடக்கும் போல். 

மேற்கு வங்காளத்தில் திரிணமூல் கட்சி யினர் பாஜக வினரை தாக்கிக் கொன்று குவித்ததால் கண்டனங்களையும் அனுதாங்களையும் மட்டுமே தெரிவிக்க முடியும். 

கல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடக்கும் தொடர்ச்சியான வன்முறைகளைக் கண்டித்து மகாத்மா காந்தி சிலை முன் அறவழிப் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரூபா கங்குலி மற்றும் மேற்கு வங்க மாநில மகளிரணித் தலைவி அக்னிமித்ரா பால் ஆகியோரை  முன்னறிவிப்பு ஏதுமின்றி கொல்கத்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் வாழ்த்து இப்போது போராட்டம். யாராயினும் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசியல் நடத்த வேண்டும்.பிரதமர் அலுவலகம்

முதல்வராக பதவியேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தா அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...