முன்னாள் அதிமுகவின் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் மலேசிய நடிகை பரபரப்புப் புகார்

முன்னாள் அதிமுகவின் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் மலேசிய நடிகை பரபரப்புப் புகார்!திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஏமாற்றியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் புகார்.

கர்பிணியாக இருந்தபோது கருவை கலைக்க வைத்தார்; தவறாக போட்டோ எடுத்து மிரட்டினார்.

ஒவ்வொரு முறையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் இதுவரை புகாரளிக்கவில்லை, ஆனால் இப்போது மிரட்ட ஆரம்பித்ததால் போலீசில் புகார் அளிக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் தகவல்.   இதன் கடந்த கால நிகழ்வுகள் பிண்ணனி குறித்த பார்வை இது தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் மூலமாக கோரப்பட்ட பாரத் நெட் டென்டரின் மதிப்பு 1950 கோடி ரூபாய். அதில் 40 சதவீதம் கமிஷன் என்பது கிட்டத்தட்ட 840 கோடி ரூபாய், கமிஷன் பணம் மொத்தமாக அப்போதைய ஐடி மினிஸ்டர் மூலமாகத் தான் பங்கு பிரிக்கப்படுமாம், முன்பணமாகப் பெறப்பட்ட ரூபாய் 500 கோடிகளைக் குறி வைத்தே முன்னால் ஐடி மினிஸ்டராக இருந்த மணிகண்டனுக்கு எதிராக அரசியல் காய் நகர்த்தல் வேலைகளில் ஈடுபட்டு முன்னால் மணியான அமைச்சர் இப்போது வேல் பாய்ச்சத் திட்டமிட்ட படியே மலேசியா  நடிகையான சாந்தினியை சுற்றுலாத்துறையின்  முன்னால் அமைச்சர்  இனிப்பானவர்  மூலமாக சுற்றுலாத் தூதுவராக நியமித்து  பின் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுடன் பழக வைத்து நடிகை சாந்தினி மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு பாரத்நெட் டென்டரை வளைத்துக் கொடுத்துள்ளார் மணியானவர் முன்னால் ஐடி மந்திரி மணிகண்டன் சரிவர ஒத்துழைக்காத காரணத்தினாலும் கமிஷன் பணத்தைப் பங்கு பிரிப்பதிலும் ஏற்பட்ட பிரச்சனையாலுமே ஐடி மணிகண்டன் அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே எதிர்ப்பாராத விதமாக பாரத்நெட் டென்டர் ரத்து செய்யப்பட்டதால், அந்த மணியானவரிடம் டென்டருக்குப் பண கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்க..அதை அந்த மணி இந்த மணிகண்டனிடம் பணத்தைக் கேட்க, ஐடி மணிகண்டன் கைவிரித்துக் காட்டியுள்ளார், கடுப்பான மணியானவர் தண்டச் செலவு செய்து டென்டர் கோரி கமிஷன் கொடுத்தவர்களுக்கு செட்டில் செய்த கோபத்தில் ஐடி மணிகண்டனை நடிகை மேட்டரில் மாட்டி சிக்க வைத்துள்ளார் என் பலர் பேசுவது நம் காதில் விழாமலில்லை.

இதில் அந்த மணியானவருக்கு என்ன லாபம் என்றால்...ஐடி மணிகண்டனின் அனைத்து சொத்துக்களும் அவரின் மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ளதாம், தற்போது முன்னாள் ஐடி மணிகண்டனிடம் பணம் திரும்ப ப் பெறத் திட்டம் என அந்த கட்சியினர் மட்டுமல்லாமல் பலர் பேசுவதும்  கேட்டால் இராமநாதபுரத்தார் சிக்கியதன் பின்னணி புரியும்..                 "அன்னக்கிளி! அன்னக்கிளி!!

அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி?

நல்லபடி வாழச்சொல்லி   இந்த மண்ணை கொடுத்தானே பூர்வக் குடி,

கம்மங்கரை காணியெல்லாம் பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி,

நாய், நரி, பூனைக்கும் தான் இந்த ஏரிகுளம் கூடச் சொந்தமடி,

எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ, வாங்கோ, ஒன்னாகி!

அம்மா ஏ அம்பாரி     இந்த இந்த..... மும்மாரி!  அரசியலில் பல.......மாறி. ..!

பல பிள்ளை குட்டிக்காரனின் மைண்ட் வாய்ஸ் இது.             "ஊரையடித்து உளையில் போடும் கூட்டமே ..எப்படா அப்பா ஓயும் உங்கள் ஆட்டமே" இதுவே பொது நீதியான மக்களின் குரல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா