கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

 ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனைக்கு முடிவு செய்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை


. மலையாளப் பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குரூப். ஞானபீட விருது பெற்றவர். பெயரால் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில். இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்ததனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோமென ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்ட

நிலையில் இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளதில், "கேரளச் சகோதரர்களின் பேரன்பினால், மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி, எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன். ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதைக் கண்டு வருத்தம் சிறிதளவுமில்லை.

சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களைக் கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர். மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

'இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்" எறியட்டும் அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம்". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா