இணைய வழி வகுப்பில் முறையற்று நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டம் பாயும் தமிழக முதல்வர் அறிவிப்பு


இணைய வழி வகுப்பில் (Online Classes) ல் முறையற்று நடந்து கொள்வோர் மீது போக்சோ ( POCSO ) சட்டம் பாயும்! வழிகாட்டுதல்களை வகுத்தளிக்க வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.

மாணவ - மாணவியர்களுக்காக ஹெல்ப்லைன் எண் அமைத்து, பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தவறிழைப்போர் தப்ப முடியாது! என தமிழக முதல்வர் அறிவிப்பு.      தனியார் பள்ளிகள் என்பவை மிகப் பெரிய - கேள்விக்கு அப்பாற்ப்பட்ட – அதிகார மையங்களானதில் தொடங்குகிறது இது போன்ற பிரச்சினைகளின் மூலம்!

பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் (வயது 59) இப்போது தான் வெளியில் தெரிய வந்து மாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை தந்த இது போன்ற சம்பவங்களின் பின்னணி என்ன.?

ஆக, இந்த முதிய வயசிலேயே  தன் மகளாகவோ, பேத்தியாகவோ கருத வேண்டிய பெண் குழந்தைகளிடம் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால், இத்தனை ஆண்டுகளில் என்னென்னவெல்லாம் செய்திருப்பார் ராஜகோபாலன்? எத்தனை குழந்தைகள் அதற்கு பலியாகிச் சொல்ல முடியாத வேதனையில் புழுங்கி இருக்கும்.? 

படிக்க வந்த இடத்தில் வாழ்நாளெல்லாம் எண்ணியெண்ணி வருந்தக் கூடிய வகையில் இளம் பிஞ்சுகளின் மனதில் ஆற்றாமுடியாத ரண வேதனையை கொடுத்திருக்க கூடும்!

சின்னஞ் சிறுசுகளிடம் இவ்வளவு கேவலமாக நடக்கத் துணியும் ஒருவரை அவரது பேச்சுகள், பார்வைகள், அங்க சேட்டைகளைக் கொண்டே இந்த நபர் ஆசிரியருக்கு தகுதியானவர் இல்லை என எப்போதோ முடிவுக்கு வர வந்திருக்க வேண்டுமே பள்ளி நிர்வாகம்?

இந்த நபர் மீது பல முறை புகார்கள் சொல்லப்பட்டும் அதை நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருந்ததென்றால், அதை எவ்வாறு புரிந்து கொள்வது..?

நிர்வாகத் தலைமையில் இருப்பவர்களிடம் ஏதாவது பலவீனமிருந்ததா.? அது இந்த ஆசிரியருக்கு சாதகமாகப் போய்விட்டதா.? இல்லையெனில், இவ்வளவு மோசமான ஒரு நபர் நீண்ட நெடிய ஆண்டுகள் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய முடிந்திருக்க முடிகிறது எனில், நிச்சயம் அந்த பள்ளி நிர்வாகம் தான் முதல் குற்றவாளி.

சமூகத்தின் பொதுவிதிகள் எதுவும் எங்களுக்கு பொருந்தாது.!’’

நாங்கள் யாரும் நெருங்க முடியாத அதிகார மையம்!’’

கல்விக்கு நாங்கள் வைத்ததே விலை! உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எங்கள் கையில்! ஏதாவது அதிருப்திகளை வெளிப்படுத்தினாலோ அல்லது எதிர்க்கேள்வி கேட்டாலோ..உங்கள் பிள்ளைகளுக்கு டி.சி கொடுத்துவிடுவோம்!

என்ற தன்மையில் இது போன்ற தனியார் பள்ளிகள் செயல்படுவதால் தான் அங்கே என்ன நடந்தாலும் வெளியுலகிற்குத் தெரிவதில்லை.

எதிர்த்தாலோ, புகார் தெரிவித்தாலோ தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைத்து விடுவார்களே.’ 

என்று பெற்றோர்கள் மனதில் இவர்கள் விதைத்துள்ள அச்ச உணர்வு தான் இவர்களை எந்த எல்லை வரையும் செல்லத் தூண்டுகிறது.

ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு இளம் மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு மார்பை திறந்து போட்டவண்ணம் பாடம் எடுக்கத் துணிகிறான் என்றால், அந்தக் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெற்றோர் கண்களில் பட்டுவிட்டால் – ஐயோ அசிங்கமாகி விடாதா.?

அழகையும், ஆடைகளையும் வர்ணித்து, சினிமாவுக்கு அழைக்கிறோமே, ஆபாச போட்டோக்களை கேட்கிறோமே..!        நம் நிர்வாகத்திற்கு தெரியவந்தால் நம் மீது நடவடிக்கை பாயாதா..? என்றெல்லாம் இந்த நபருக்கு பயம் வரவில்லையே..? 

இவன் இப்படிப்பட்ட பல பாதகங்கள் செய்து பழுத்த கிரிமினலாக இருந்தால் ஒழிய, இப்படி நடக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட கிரிமினல்களுக்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அவர்களிடமும் இவன் தன் சேட்டைகளைச் சொல்லியும், போட்டோக்களைப் பகிர்ந்துமுள்ளான் எனில், அந்த பள்ளியிலே இவனைப் போல செயல்படக் கூடிய மற்ற சில ஆசிரியர்களும் இருக்க கூடும். இவனுடன் வேலை பார்த்த சக பெண் ஆசிரியர்களுக்கு இவன் என்ன தொல்லை கொடுத்திருப்பானோ..?

தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, மிகுந்த சுயநலத்துடன் எதிர்காலத்தில் நல்ல சம்பாத்தியமுள்ள பதவி, அதிகாரத்தை அடையும் ஆசைகளுடன் கல்வியை அணுகும் மனப்போக்குகளே இப்படிப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் தன்நிகரில்லா அதிகாரங்களுடன் செயல்படக் காரணமாகிறது.

எங்கு சுதந்திரமும், சுயமரியாதையும் கேள்விக்கு உள்ளாகிறதோ அங்கு நமக்கு எந்த தொடர்பும் அவசியமில்லை’’ என்று எப்போது நமது பெற்றோர்கள் விழிப்புணர்வு கொள்கிறார்களோ..அப்போது தான் இவர்களின் கொட்டம் அடங்கும்.

மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை இது போன்ற பள்ளிகள் மீது உருவாக்கி வெளிச்சம் பாய்ச்சிய ஊடகங்கள் சில தற்போது கண்டும், காணாதது போல செய்தி போடுகின்றன! பெரிய ஜாம்பவான்கள் நடத்தும் பத்திரிகைகள் இந்த விவகாரத்தில் பட்டும்படாமல், ‘ஒரு தனியார் பள்ளி’ எனக் குறிப்பிடுகிறார்கள் என்றால், அவர்களின் உள் நோக்கம் என்ன..? 

இன்றைய தகவல் தொழில் நுட்பயுகத்தில் அனைத்து செய்திகளும், சமூக ஊடகங்களில் விலாவாரியாக விவாதிக்கப்படுகிறது என்று அறிந்த நிலையிலும் அவர்களின் விசுவாசம் பாருங்கள்..!

மற்றொரு விஷம ஊடகமான தினசரி நாளிதழ் வாசகர்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுகிறர்கள் என்பதற்கு  இரண்டு வாசகர்களின் பின்னூட்டங்கள் சான்று! 

ஆக, நம் போன்றவர்களுக்கு உள்ளம் பதைக்க வைக்கும் ஒரு தாங்கமாட்டாத அக்கிரமத்தை இவர்கள் எப்படித் திசை திருப்ப துடிக்கிறார்கள் பாருங்கள்! அண்ணா பல்கலைக் கழக விஷயத்தில் ஆவேசமாக  குரல் கொடுத்த நடிகர் கமலஹாசன் ஜாதி காரணமாக தற்போது மெளனம் சாதிக்கிறார் பின் காலதாமதமாய் ஆதரவாய் அறிக்கை வேறு தருகிறார்.

இந்தப் பள்ளி நிர்வாகத்தினர் மிக,மிக செல்வாக்குள்ளவர்கள்! இவர்கள் உயர்பதவி இன்பூளுயன்ஸ் செய்வார்கள்.மிக சுலபத்தில் இதிலிருந்து விடுபட்டுவிட சகல வாய்ப்புகளும் உள்ளது. அப்படி நடந்தால் அது இப்படி அத்துமீற நினைக்கின்ற சபல ஆசிரியர்களுக்கு ஆதரவாய்ப் போய்விடும். நம் பெண் குழந்தைகளின் எதிர்காலமே நாசமாகிவிடும். ஆகவே, ராஜகோபாலனை மட்டுமின்றி, அவனுக்கு ஆதரவளித்த நிர்வாகத்தினர் தொடங்கி அனைவரையும் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.என்ற குரல் இப்போது ஓங்கி ஒலிக்கிறது

இந்தப் பள்ளியின் பூர்வீகம் குறித்து தற்போது வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல பெண்கள் கூட்டாகச் சேர்ந்து நுங்கம்பாக்கம் பெண்கள் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் இயங்கிய பெண்கள் அமைப்பால் 1952 ஆம் ஆண்டு ஒரு பொதுப்பள்ளி ஏழை எளியோருக்காக 1958 ஆம் ஆண்டில் 13 மாணவர்களுடன் உருவாக்கப்படுகிறது! இதில் அப்போது செல்வாக்குடன் திகழ்ந்த நடிகர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி ஒரு ஆசிரியராகவும்! இவர் குமுதம் உள்ளிட்ட  பத்திரிகைகளில் ப்ரிலேன்சராக கட்டுரைகள் எழுதி வந்தவர்.! 

இந்தப் பெண்கள் அமைப்பின் சேவையைச் சொல்லி அரசுக்கு தந்த அழுத்தத்தின் விளைவாக அன்றைய முதல்வர் காமராஜர் இவர்களுக்கு அரசு நிலத்தைத் தருகிறார். 1962 ஆம் ஆண்டில் பாலபவன் செகண்டரி பள்ளியின் அடிக்கல் நாட்டுவிழாவில் காமராஜரை அழைத்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களுக்கு அரசாங்கத்தில் இருக்கும் செல்வாக்கை நாம் உணரலாம்! 

இப்படிப் பொதுப்பள்ளி என்ற கருத்தாக்கத்தில் உருவான பள்ளியை ஒரு அறக்கட்டளையின் சொத்தாக மாற்றி, அந்த அறக்கட்டளைக்கு ஒரு குடும்பத்தினரே அறங்காவலர்களாக மாறியதும், அந்தப் பள்ளியின் புகழை அந்த சமுதாயத்தைச் சார்ந்த ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கின அவற்றை

எட்டுதிக்கும் பரவவைத்து ஒரு ‘டிமாண்ட்’ உருவாக்கப்பட்டு, கல்வி வளம் கொழிக்கும் வியாபாரமாக மாற்றப்பட்டுவிட்டது. 

அறக்கட்டளையின் பேரில் வசூலிக்கப்பட்ட பணத்தையெல்லாம் மிக நுட்பமாக தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டு எங்கெங்கும் சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். மேலும் பல இடங்களில் கிளைகள் தொடங்கி வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டனர்! இவ்வளவு பொருளாதார ஆதாயத்தை அனுபவித்த ஒய்.ஜி.மகேந்திரன், நான் டிரஸ்டி தான். எனக்கு நிர்வாகத்தில் சம்பந்தமில்லை. என் தம்பியும், அவன் மனைவியும் தான் நிர்வாகத்தை பார்க்கின்றனர்’’ என சொல்லி நழுவுகிறார். அவரது மகள் மதுவந்தி இல்லாத பேச்செல்லாம் பேசுகிறார்.

வியாபாரம் என்று வந்த பின்பு அதில் ரகசியம் காக்க வேண்டியதாகிறது! அந்த ரகசியத்தை பேணும் சூட்சுமங்களில் ஒன்று தான் தங்களை யாரும் நெருங்கமுடியாத அதிகார மையமாக அவர்கள் கட்டமைத்துக் கொள்வதாகும். தங்கள் நோக்கங்களுக்கு உகந்தவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கு தான் அவர்கள் இடம் தருவார்கள். அதனால் தான் முன்னால் முதலமைச்சர் தன் பேரனுக்கு அங்கு சீட்டுக் கேட்ட போது மறுத்துள்ளனர்.  அந்த பள்ளியில் சீட்டு கேட்டது அந்தப் பெரிய தலைவருக்கே இழுக்குத் தான்

தமிழை ஒரு பாடமொழியாகக் கற்பிக்கமாட்டோம்’ என நீதிமன்றம் சென்றவர்கள் தான் இவர்கள்! இவர்களின் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் தாய் மொழியான நம் தமிழுக்குக் கிடையாது.

மாநில மொழிப் பாடத் திட்டம் மட்டமானதெனப் பிரச்சாரம் செய்து சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திற்கு இவர்கள் மாறிக் கொண்டனர்! இதன் மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தும் சூட்சுமமாக தங்களை விடுவித்துக் கொண்டனர்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தையை காலை 10 மணிக்கு நீச்சல் குளத்தில் இறக்கியதில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. பாடம் படிக்க வந்த குழந்தையை காலை பத்து மணிக்கு நீச்சல் குளத்தில் இறக்க வேண்டிய அவசியம் என்ன..?  நீச்சல் பயிற்சிக்கு தனியாக இடம் வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டியது தானே! இதில் இன்று வரை இந்த பள்ளி தண்டிக்கப்படவே இல்லை!

இப்போதும் கூட இந்த பள்ளியை காப்பாற்ற எவ்வளவோ அதிகார லாபிகள் நடக்கின்றன! முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்கவே மறுத்துள்ளனர். பொது மக்கள் கோபத்திற்கு இரையாகாமல் இருக்க, பிறகு விசாரணைக்கு வந்தனர். இவர்களை  உள்ளூர் காவல்துறை விசாரிக்க கூடாது. காரணம்,  இந்தப் பள்ளியிடம் ஆதாயம் அடைந்தவர்கள் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது என்ற வாதமும் வருகிறது.

ஆகவே, நேர்மையான விசாரணைக்குத் தோதான காவல்துறை அதிகாரிகளைக்  கொண்டு விசாரிக்க வேண்டும். அதிகாரத் தலையீடு பலமாக இருந்தாலும், மாநில அரசு மக்கள் நலன் சார்ந்து பாரபட்சமில்லாமல் உறுதி காட்டி தண்டித்தால் மக்களிடம் அரசின் இமேஜ் உயரும். காஞ்சிபுரம் ஜெயேந்திர சங்காராச்சாரி விஷயத்தில் எந்த அழுத்தத்திற்கும் பணியாமல் முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா செயல்பட்டதைப் போல, உறுதிகாட்ட வேண்டும். கடைசியாக ஒன்று சொல்வதென்றால், எந்த பள்ளியில் வெளிப்படைத் தன்மை இல்லையோ. எந்த பள்ளிக் கூட நிர்வாகம் தங்களை அலிபாபாவின் குகை போல வைத்துக் கொண்டு கல்விக் கொள்ளைக்காரர்களாக இருக்கின்றனவோ.

அவர்களால் நல்ல கல்வியையும் சிறந்த பண்பாட்டையும் ஒரு போதும் கற்பிக்க முடியாது.

அவர்கள் சிறந்த அடிமைகளை உருவாக்கும் கல்வியையும், சோரத்திற்கு துணைபோகக் கூடிய மனநிலை கொண்ட சமுதாயத்தையும் தான் உருவாக்க முடியும். 

யோசித்துப் பாருங்கள்..இப்படிப்பட்ட ஒரு காமுக ஆசிரியர் எளிய மக்கள் வசிக்கும் சென்னை பகுதியில் 59 வயது வரை ஒரு பள்ளியில் தன் லீலைகளை தொடர்ந்து அரங்கேற்றி இருக்கமுடியாது.

வேலைக்குச் சேர்ந்த ஆண்டே விரட்டப்பட்டிருப்பான் அல்லது பொதுமக்களால் தர்மஅடி கொடுக்கப் பட்டிருப்பான். நமது பெண்கள் இவனை விசாரணைக்கு அழைத்து வரும் வழியிலேயே புரட்டி எடுத்திருப்பார்கள்!

இது போன்ற பள்ளி நிர்வாகங்கள் இனியாவது திருந்துவார்களா என்றால். வாய்ப்பு மிகக் குறைவு. நமது சமூக அமைப்பில் இது போன்ற சம்பவங்கள் இவர்களுக்கு அதிகாரவர்க்கத்தை எப்படி சமாளிப்பது என்பதை தான் அதிகம் கற்க வழிவகுக்கும் ! ஆனால் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. அது, இது போன்ற பள்ளிகளை முற்றிலும் புறக்கணிப்பதே! சிறப்பானது.

என்ன நடவடிக்கை எடுத்துவிடப் போகிறார்கள்..?

நேரில் சென்றும். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பத்ம சேஷாத்ரி பள்ளி மீது காவல்துறை புகாருக்குப் பின்னர்.

சென்னை கேகே நகரிலுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து தோண்டத் தோண்ட பல பாலியல் புகார்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அங்கு படிக்கும் மாணவிகள், முன்னாள் மாணவிகள் பலர், பள்ளியில் தாங்கள் எதிர்நோக்கிய பாலியல் ரீதியான, ஜாதி ரீதியான பிரச்சனைகளை இணையத்தில் அடுக்கி வருகிறார்கள். அதிலும்  ஆன்லைன் கிளாஸ் நடக்கும் போது அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளின் வாட்ஸ் ஆப்பில், படம் பார்க்க வரியா என்பது தொடங்கி பாலியல் ரீதியாக பல மெசேஜ்களை அனுப்புவது, மாணவிகளை வகுப்பு நடக்கும் போது தவறாக தொடுவது என்று அங்கு பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடுமையான பல புகார்கள் வைக்கப்பட்டு உள்ள இந்த புகார்கள் உலுக்கி உள்ள நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. பத்ம சேஷாத்ரி பள்ளிக்குள் விசாரணை நடத்த சென்ற போது பள்ளி நிர்வாகம் காவல்துறையினரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது பின்பு

காவல் வாகனத்தை உள்ளே விடாமல் கேட்டை மூடி வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணை எதற்கும் பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்பு தீவிரமாக கோரிக்கை வைத்த பின்பே காவல்துறை உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் இதில் தலையிட்ட பின்பே பத்ம சேஷாத்ரி பள்ளி வழிக்கு வந்துள்ளது. இதன் பின்பே பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆனால் இன்னுமும் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி முதல்வர் விசாரணைக்கு வந்ததும் பின்னர் நிர்வாகம் ஆஜராக சமன் வழங்கிய நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் இந்திரா மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார். என்ன நடந்தது என்பது குறித்து தனித் தனியாக விளக்கம் அளிக்கும்படி கூறியுள்ளார்.அறங்காவலர் குழு இல்லாமல் ஒரு அறக்கட்டளை உருவாக்க இயலாது.

அறங்காவலர்கள் அறக்கட்டளையின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு. அறங்காவலர் குழுவில் உள்ளவர்களுக்கு நிர்வாகம் சார்ந்த பொறுப்புகள் உண்டு. அறக்கட்டளையின் ஊதியமும், இலாபமும் சென்று சேரும். ஆகையால் கைகழுவும் மகேந்திராவின் தந்திரம் சட்டத்துக்கு புறம்பானது.

நன்றாக கவனியுங்கள் கடந்த 5 ஆண்டுகளாக என்று அவர் கூறி இருக்கிறார். என்று பிள்ளைகளின் கையில் நேரடியாக அதி திறன் வாய்ந்த செல்லிடைபேசிகள் சென்றனவோ அங்கே பல கேடுகளும் உடன் நுழைந்து விட்டன.

தங்கள் பள்ளிக்கு இப்படியொரு சிக்கல் வந்து சேருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் ஓய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர்.

சென்னையின் மிக முக்கிய கல்வி அடையாளங்களில் ஒன்றும் பிராமணர்களின் பிரஸ்டீஜ் ப்ராப்பர்டிகளிலும் ஒன்றான பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி ஆசிரியரான கோவிந்த வரதாச்சாரி ராஜகோபால் என்பவர் மீது ஒரே நாளில் அடுக்கடுக்காக எழுந்த பாலியல் சீண்டல் புகார்கள் வரிசையாக சமூக வளைதளங்களில் பகிரப்படவும் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயிருக்கின்றனர் ஓய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர்.

செய்தி வெளியான உடன் தன்னளவில் தனிப்பட்ட முறையில் செய்தியை விசாரித்த நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், இது ஒரு நீண்ட நாள் சிக்கல் என்றும், ஒரு சில ஆசிரியர்கள் தாங்கள் குறிவைக்கும் மாணவிகளுக்கு வசதி படைத்த மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க வைத்து, ஸ்பெசல் கிளாஸ் என்று விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவைத்து அவர்கள் அசந்தர்ப்பமாக இருக்கும் நேரத்தில் படம் பிடித்து மிரட்டி தங்கள் பாலியல் தேவைகளை தணித்துக் கொண்டதையும், அப்படியான சில படங்களையும் வீடியாேக்களையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டதையும் உறுதி செய்துக்கொண்டப் பின்னர், தனக்கும் பள்ளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லையென்ற அறிவிப்பை வெளியிட்டார். 

குடும்ப பாகப்பிரிவினையில் பள்ளியின் உரிமம் முழுவதும் தன் தம்பிக்கு போய்விட்டாலும் தான் அதில் ஒரு ட்ரஸ்டியாக மட்டுமே தொடர்வதாக ஒப்புக்கொண்டார்.

அடுத்தடுத்து குடும்ப உறவுகள் தன்னை முற்றுகையிட நம்ம குடும்பத்துக்கு என்று இந்த சமூகத்திலிருந்த மதிப்பை இந்நிகழ்வு சிதைத்துவிட்டதாக பொரிந்து தள்ளியிருக்கிறார்.

இது அரசியல் பழிவாங்கல் என்று மகள் மதுவந்தி சொன்னதும் அவரிடம் சீறிய மகேந்திரன், அது உண்மையல்ல என்றும் புகார்களை தானே விசாரித்துவிட்டப் பின் தன்னிடம் பொய் சொல்வதில் அர்த்தமில்லை என்றும் அவர் வாயை அடைத்திருக்கிறார்.

தனக்கென இருந்த சர்வக்கட்சி தொடர்பை மகளுடைய நேரடி அரசியல் சார்பு நடவடிக்கைகள் கெடுத்துவிட்டதையும் சொல்லி புலம்பியிருக்கிறார்.

நேரடியாக தான் தலையிடாமல் யார் மூலம் பேசலாம் என்று தவித்ததாகவும் பல செய்திகள் உலவ. 

தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, பள்ளியின் நிர்வாகத் தலைமையிலிருப்பவர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை  தன்னுடைய கோரிக்கையாக்கி நள்ளிரவில் இமெயில் அனுப்பியிருக்கிறார் மகேந்திரன்.

இதற்குள் தன்னுடைய அரசியல் வட்டாரத்தை தொடர்புக்கொண்ட மதுவந்தி பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர் பிராமணர்கள், குறிப்பாக மிடில் கிளாஸ் மாணவிகள் தான் என்பதை மேற்கோள்காட்டி அவர்களை தங்கள் சமூகத்து முக்கியப் பிரமுகர்கள் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியை முடுக்கிவிட்டிருக்கிறார். இதற்காக எத்தனை செலவு செய்யவும் தான் தயாராக இருப்பதையும் தெரிவித்திருக்கிறார் எனவும் தகவல் வருகிறது..

மொத்தத்தில் ஜக்கி வாசுதேவ், ஹெச்.ராஜா, பத்மா சேஷாத்திரி என்று நடப்பவை யாவும் தங்கள் சமூகத்தின் அதிகார பிம்பத்தை உடைத்து வருவதாகவும், இதை சரி செய்ய விரைவில் ஒரு சத்ருசம்ஹார யாகத்தை செய்ய வேண்டும் என்றும் சிலர் தங்களுக்குள்  பேசிக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

மத்தியரசு கொரோனா விவகாரத்தில் சர்வதேச சிக்கலில் தவித்துக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டு விவகாரங்களை எடுத்துப் போக முடியாமல் தவிக்கும் தமிழக பாஜக, அடுத்து என்ன பூகம்பம் கிளம்புமோ என்ற பீதியில் தவித்துக்கொண்டிருக்கிறது.

அரைவேக்காடு பேத்தி தொல்ல தாங்க முடியலடா என் சமூக ஊடகத்தினர் மத்தியில் குரல் வருகிறது.

இருநூறு முன்னூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டுக்கணக்கில் உழைத்து சம்பாதித்து ஊர்முழுக்க பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள் என தமிழகம் முழுவதும் ஏராளமான கல்விக்கூடங்களை கல்வித் தந்தைகள் நிறுவியுள்ளனர்.. 

பச்சையப்ப முதலியார் கானாடுகாத்தான் அண்ணாமலை செட்டியார்  காஞ்சிபுரம் ஊவேரி பு.த.லீ செங்கல்வராய நாயக்கர் காரைக்குடி அழகப்ப செட்டியார்னு.. குறைந்தபட்சம் ஒரு அம்பது பெரிய ஜாம்பவான்கள் கல்வி வள்ளல் பட்டியலில் வருவார்கள்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க கூட,"  எங்க பாட்டன் முப்பாட்டன் ரத்தம் சிந்தி சேர்த்த கல்வி நிறுவனம் மீது ஒரு சின்ன கல்லு விழுந்தா கூட நாங்கள் பொறுக்க மாட்டோம்னு உதார் செய்தி வெளியிட்டது கிடையாது.

ஆனா இங்க ஒன்னு, வெறும்  ஒன்றையணா தானமாக வந்த பள்ளியை வெச்சிகிட்டு என்னா இம்சைடா சாமி.என பலரும் கருத்து கந்தசாமியாக. புலம்ப . நமக்கு புதிய தகவல் யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி. முதலில் அவரை விசாரிங்க.. கொளுத்தி போட்ட நடிகை குட்டி பத்மினியால் . பரபரப்பு "மொதல்ல நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும்" என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு நடிகை குட்டி பத்மினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒருபக்கம் பிள்ளைகளின் பாதுகாப்பை இழந்த முன்னாள் பெற்றோர்கள் கதறுகிறார்கள்.. மற்றொரு பக்கம் பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு முறைகேடுகள் ஆங்காங்கே வெடித்து வருகிறது..

இதற்கு நடுவில் பிராமணர், இந்து என்ற அஸ்திரத்தை பிடித்து தப்பிக்கும் முயற்சியில் மதுவந்தி போன்றோரும் இறங்கி உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், நடிகை குட்டி பத்மினியும் சமூக வளைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

"பத்ம சேஷாத்திரி ஸ்கூலில் சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன்... அப்போது ஒய்ஜிபி கூப்பிட்டதால், அவங்க ரூமுக்கு போனேன்.. ஏம்மா... நீ எல்லாம் கியூவில் நிக்கலாமா? இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற, உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற... எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்கு.."ன்னு சொன்னார்.

சந்தோஷம்

பல சீரியல்ல ஆக்ட் பண்ணியிருக்கேன்... டிராமா, சினிமாவில் ஆக்ட் பண்ணியிருக்கேன்.. ஆனாலும் யாருகிட்டயும் போயி அப்ளிகேஷன் கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது... சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆனால் நடந்தது என்ன? என்னுடைய மகளுக்கு அட்மிஷன் எல்லாம் ஆயிருச்சி... ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருந்தாள். ஒரு மாசத்துக்கு அப்புறம் மேடம் கூப்பிடறாங்கன்னு சொன்னாங்க.. என் பொண்ணு சரியான வாண்டு.. என்ன பண்ணிச்சோ.. யார அடிச்சாளோ-ன்னு நினைச்சிக்கிட்டே ஸ்கூலுக்கு போனேன்.

அப்போ என்கிட்ட சொன்னாங்க, "நீ வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு... நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. வருமான வரித்துறை சேர்மனை நீங்க மீட் பண்ணியிருக்கிறீர்களா?ன்னு கேட்டாங்க. "ஓ, நல்லா தெரியுமே.. அவரை பார்த்து தான் அப்ரூவலே வாங்கி இருக்கோம்... ஒவ்வொரு வாரமும் ஸ்டோரி எல்லாம் அவர் தான் கிளியர் பண்ணணும்"னு சொன்னேன்.

அவர்கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு... எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரமாட்டேங்கிறார்.. கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம்... ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம். சட்டப்படி அது தப்பு போல இருக்கும்... அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க.

அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்" என்றார். குட்டிபத்மினியின் இந்த வீடியோ இணையத்தில் தற்போதுபடுவைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்த விவாதங்களும் இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு ட்வீட் போட்டுள்ளார் குட்டி பத்மினி.

அதில், நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும் என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? இவரை ஏன் குட்டிபத்மினி உள்ளே இழுத்து விடுகிறார்? எந்த வகையில் வசந்தி அந்த பள்ளியால் பாதிப்புக்கு உள்ளானார் என்று தெரியவில்லை.. குட்டிபத்மினி கொளுத்தி போட்ட இந்த வசந்தி விவகாரம், பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் மேலும் பரபரப்பை அள்ளித் தெளித்து வருகிறது. புதிதாக வெட்டப்பட்ட கினற்றிலிருந்து பூதம் வருகிறது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா