சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைதுதுபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், 1.25 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 63.20 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கபரி சமினோ ஜேசய்யா(26) என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது பெல்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்து  9 பாக்கெட்டுகளில் 1.42 கிலோ எடையில் தங்க பசைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 1.25 கிலோ எடையுடைய சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.63.20 லட்சம்.

இதையடுத்து ஜேசய்யா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்