அதிமுக சட்டமன்ற கட்சி துணை தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்தனர்.

அதிமுக சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற கட்சி துணை தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்தனர்.


பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில் தான் செல்வாக்கு எனக் கூறிய வா.புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் ஓ. பன்னீர் செல்வம். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதென  கடந்த கால அதிமுக அரசு முடிவு செய்த இடஒதுக்கீடு அறிவிப்பால் பாமகவுக்கு 23 தொகுதிகளை  அதிமுக கொடுத்தது. அப்போது பாமக, இது மிகவும் குறைவான தொகுதிகள்தான் என்றது.

பாமக செல்வாக்கு குறித்து விமர்சனம் வந்தது


 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அடிப்படையிலும் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளே அதிகம்தான் என விமர்சிக்கப்பட்டது. அதுவும் தோற்றுப் போவோம் எனத் தெரிந்த திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை பாமக பெற்றதென்கிற விமர்சனமும் அப்போது வந்தது.


பாமகவுக்கு 5 இடங்கள்தான்..

சட்டசபைத் தேர்தலில் அதிமுக பலமான மாவட்டங்களில் அதிமுகவின் தயவில் பாமகவும் 5 இடங்களில்தான் வென்றது. இது அப்பட்டமாக பாமகவின் செல்வாக்கு என்ன என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆய்வுக் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இருந்தாலும் அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவுக்கு பாமக மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருந்தன.


இந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி, பாமக இல்லை எனில் 20 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என விமர்சித்தார். இது குறித்து அதிமுகவின் பெங்களூர் வா. புகழேந்தி அளித்த பேட்டியில், பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில் தான் செல்வாக்கு. ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால் தான் அன்புமணி ராஜ்யசபா எம்.பியானார் என்பதை மறக்கலாமா?  என நேற்றுச் சாடினார்.


சட்டசபை தேர்தல் முடிவடைந்த ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக இடையே முட்டல் மோதல் பகிரங்கமாக வெடித்ததனால் அடுத்தடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக- பாமக கூட்டணி நீடிக்குமா என சந்தேகமே என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.


அதிமுக சார்பாக இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.. பொதுச்செயலாளர் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் வி.கே.சசிகலா நடராஜன் தினமும் கட்சியின் நிர்வாகிகள் பலருடன் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று நடந்த அதிமுக கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

3 மணி நேரம். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வி.கே.சசிகலா நடராஜனுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம்: வி.கே.சசிகலா நடராஜனுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என முடிவு செய்யப்பட்டுள்ளது.அதிரடியாக அறிவித்துள்ளனர்.

அதோடு வி.கே.சசிகலா நடராஜனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வி.கே.சசிகலா நடராஜனுடன் தொலைபேசியில் பேசிய 15 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி மற்றும் வி.கே.சசிகலா நடராஜனுடன் தொடர்பு கொண்ட 16 கட்சி செயற்பாட்டாளர்கள் இதே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.புகழேந்தியும் வெளியேற்றப்பட்டார்.ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி மிகவும் சூடாக பேசியதாக கூறப்படுகிறது. வி.கே.சசிகலா நடராஜன் கட்சிக்குள் வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போல பேசி இருக்கிறார்.இன்னும் ஒரு தகவல் உலா வருகின்றன.முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சமயம் ஜாமீன் பெற ஏதுவாக பெங்களூர் வா.புகழேந்திக்கு இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகளை எழுதி வைத்தார்கள், அந்த சொத்துக்களின் மீதே ஜாமீன் பெற்றார்கள்.அது நாள் முதல் பெங்களூர் அடுக்கு மாடி குடியிருப்புகள் பெங்களூர் புகழேந்தியின் வசமானது. ஜெ மரணத்திற்கு பிறகு சர்ச்சைக்குரிய ஆவணங்களை தேடி அலைந்த பலருக்கு எதுவும் சிக்க வில்லை இறுதியாக சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வேதா இல்லத்தில் இருக்க கூடும் என நினைத்து வேதா இல்லத்தை கைப்பற்றி முயற்சி கைகூட வில்லை. அதை அரசின் உடமையாக்கி பூட்டு போட்ட. அந்த நேரத்தில் தான் பெங்களூர் வா.புகழேந்தி வி.கே.சசிகலா நடராஜனைத் தொடர்புக்கொண்டு பெங்களூர் அடுக்கு மாடி குடியிருப்புகளில் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் குறித்து கூற, சசிகலா அம்மையாரும் புகழேந்தியும் திட்டமிடுகிறார்கள்...

சர்ச்சைக்குரிய ஆவணங்கள் பெங்களூர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதாகவும் அந்த குடியிருப்பு தன் பராமரிப்பில் இருப்பதாகவும் இரு தலைவர்களும் தனித்தனியே கூற இருவரும் புகழேந்தியை நம்பி அந்த ஆவணங்களைப் பெறவிலை பேசியுள்ளதாகவும் ஒரு தகவல் உலா, அது கை மாறினதும் புகழேந்தி யூ டர்ன் போட்டு தற்போது இருவரிடம் இது பற்றின உண்மைகளை வெளியிடுவேன் , ஆவணங்களை தேடி அலையும் ரகசியத்தை வெளியிடுவேன் என திரும்பி விட்ட நிலையில் வி.கே.சசிகலா நடராஜனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிரமானப் பத்திரங்களைப் பற்றின முழுத் தகவல்களையும் பெற்றுக்கொண்ட வா.புகழேந்தி.சேகரித்த பல தகவல்களை வி.கே. சசிகலா நடராஜனிடம் கூறி பிறகு நாடகத்தை முடித்துக்கொண்ட முதல் ஸ்லீப்பர் செல் அல்லது ஐந்தாம் படை வேலை முடித்த ஒரு முடிவோடு செய்தியாளர்களைச் சந்தித்த வா.புகழேந்தி பாமக வைச் சாடி ஒரு தலைவருக்கு ஆதரவாக பேசுவதை போல பாவனை செய்து கட்சியை விட்டு தன்னை தானே நீக்கிக்கொள்ளும் நிலை வைத்துக்கொண்டுள்ளார். என்ற விவாதம் அரசியல் களத்திலும் பலரால் பேசப்படுகிறது உண்மையான தகவல் தானா என்று வினா எழுகிறது இப்போது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்