தமிழகத்தின் அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படம்

தமிழகத்தின் அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படம்   தமிழ்நாடு முதல்வருடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதில். மீண்டும் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தை இடம் பெற செய்வது குறித்தும்.

 கொரோனா  ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியநிலையில். தற்போது கொஞ்சம்  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட  நிலையில் விரைவில் பேருந்துப் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் முதல் கட்டமாக இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பேருந்துகள் தற்போது சர்வீஸ் செய்யப்பட்டு வருகின்றன. பேருந்துகளை மீண்டும் இயக்கும் வகையில், மொத்தமாக சர்வீஸ் செய்து விரைவில் இயக்க உள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதில் பேருந்துகளை இயக்குவது எப்படி, விதிமுறைகள், எஸ்ஓபி எப்படி இருக்க வேண்டும், கட்டுப்பாடுகள் எப்படி இருக்கலாம் என்பது குறித்தும் பேசியுள்ளனர்.

புதிய பேருந்துகள் வாங்குவது குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கிறது. முக்கியமாக தமிழ்நாடு பேருந்துகளில் மீண்டும், திருவள்ளுவரின் புகைப்படத்தை கொண்டு வரும் ஆலோசனையும் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக பேருந்துகளில் திருவள்ளூர் புகைப்படமும், திருக்குறளும் நீக்கியதை மாற்றி மீண்டும் இடம்பெற வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் புதிய பேருந்துகள், நவீன வசதி கொண்ட பேருந்துகள் என்று தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் முடிவிலும். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின் போக்குவரத்துத் துறையில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். அடுத்த வாரம் போக்குவரத்து தொடங்கப்பட்டால் கடந்த ஆட்சியில் நீக்கப்பட்ட திருவள்ளுவர் படம்  மீண்டும்  வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்