முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல் விவகாரத்தில் அவசரமாக சேகர் ரெட்டியின் அறிவிப்பு

மணல் விவகாரத்தில் அவசரமாக சேகர் ரெட்டியின் அறிவிப்பு.




பயத்தில் வந்த அறிவிப்பு மணல் குவாரி சம்பந்தப்பட்டு நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும்எஎ இதுவரை அரசிடமிருந்து பெற்றதுமில்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு  சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லையென தொழிலதிபர் சேகர் ரெட்டி அறிவிப்பு வெளியிட.

சமீபத்தில் சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளதாகவும், ரகசியமாக டீல் முடிந்துவிடடதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிய சூழலில் தன்னை பற்றியும் மணல் வியாபாரம் பற்றியும் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்போது வந்த ஆடியோ ஒன்றில்...   அந்த உரையாடல் பதிவில் உள்ளபடி...

எதிர் முனையில் பேசுபவர்: ‘‘போய்விட்டார்களா... இருக்காங்களா?’’

உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘முடிந்தது’’

எதிர் முனையில் பேசுபவர்: ‘‘தமிழ்நாடு முழுக்கவா... நாலு மாவட்டம் மட்டுமா? 'படிக்காசு' (மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் பெயர்) என்னாச்சு?’’

உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘தமிழ்நாடு முழுக்கத்தான். அவருக்கும் பிரிச்சி தருவாங்க.

எதிர் முனையில் பேசுபவர்: ‘‘மொத்தம் மூணு பேரா?’’

உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘இல்லை. நாலு பேர்’’

எதிர் முனையில் பேசுபவர்: ‘‘யார் யாரு?’’

உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், அப்புறம் வேலூர்காரர் சேகர்ரெட்டி. இதுக்கெல்லாம் சேகர்ரெட்டிதான் ஹெட்டு.’’

எதிர் முனையில் பேசுபவர்: ‘‘சேகர்ரெட்டி வந்தாரா?’’

உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘அவர் வர்லை. முன்ன ஒரே முறை மட்டும் வந்துட்டுப் போனாரு. அவங்களே பிரிச்சி கொடுப்பாங்க.’’

எதிர் முனையில் பேசுபவர்: ‘‘எது இருந்தாலும், ஐயா  கிட்ட கேட்டுச் சொல்லுங்க.

உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘வாங்கிக்கிலாம்... வாங்கிக்கலாம்’’ என்பதுடன் அந்த உரையாடல் பதிவு முடிகிறது..இத் தகவல் பரவிய நிலையில் இப்போது  நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சேகர் ரெட்டி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவி வருகிறது. சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளதாகவும், ரகசியமாக டீல் முடிந்துவிடடதாகவும் தகவல்கள் பரவின

தன்னை பற்றியும் மணல் வியாபாரம் பற்றியும் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின்

முதல்வரிடம் ரூபாய். ஒரு கோடி நிதி கொடுத்த சில நாளில் அவர் மீது வழக்கும் பாய்ந்தது.

இதுகுறித்து, தொழில் அதிபர் சேகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

நாங்கள் வாங்கியதில்லை

எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 வருடத்தில் தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை. வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.

ஒப்பந்தம் பெறவில்லை

2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். இதைத் தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றதில்லை

இனி ஈடுபட மாட்டேன்

இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும் தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தொழில் அதிபர் சேகர் ரெட்டி அவரது அறிக்கையில் கூறியுள்ளார்  நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.                     மணல் திருட்டு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. இது ஜமைக்கா மற்றும் இந்தியாவூன் ஆற்றங்கரையிலும் கடல் கரையிலுமுள்ள மணலை சட்டத்திற்கு புறம்பாக திருடும் செயல்.. ஆற்றங்கறையில்

கொள்ளையடிக்கப்படும் மணல் வகைகள்

கடல் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விடங்களில் கட்டுப்பாடற்ற மணல் எடுக்க இருந்து சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன

பல தீவுகள் இல்லாமலே போய் விட்டன

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினையும், உழவுத் தொழில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

கடலோரங்களில் மணல் அள்ளப்படுவதால் கடல்நீர் உள்ளே புகுந்து மீனவர் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவதும் நடைபெறுகிறது.

கடற்கரையில் மணல் அகழ்வினால் வெப்ப மண்டல சூறாவளிகளும் சுனாமியுடன் தொடர்புடைய அலைகளும் புயலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.

சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுதல் மற்றும் திருடுதலை இந்திய குற்றப்பபிரிவின் கீழும் பதிவு செய்யலாம்.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் சீரமைப்பு), 1957 சட்டம்

தமிழகத்தில் மணற்கொள்ளையில் ஈடுபடும் கும்பல்களுக்கு அரசியல் ஆதரவுள்ளது. இதனைத் தடுக்க முயலும் நேர்மையான அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதுமுண்டு.

கனிம வளம் கொண்ட பகுதியில் உள்ள மணலை அதிகமாக அள்ளுவது தாது மணற்கொள்ளை தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரத் தேரிப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த வகை மணற்கொள்ளை நடந்து பிரச்சனைக்குள்ளானது. தாது வளம் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றது.தமிழ்நாடு கனிம நிறுவனம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இரண்டும் அப்பழுக்கற்ற அதிகாரிகளின் ஆணைப்படி செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டின் வளங் களைக் காப்பாற்ற முடியும். கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மனலுக்கு பில் மூன்று யூனிட் மனலுடன் வெளியில் ரூபாய்.40.000 விற்பனை செய்த கொள்ளைக்காரன் பங்கு மீதம் ரூபாய் 30,000 அப்போது அடித்த கொள்ளைக்காரன் யார் கூட்டாளிகள் யா என்பதை நாம் மட்டுமல்லாமல் ஊரரியும் யாரும் அடுத்த ஆட்சியில் வந்துவிடும் நிலை தற்போது இல்லை. என்ற இப்போது உள்ள நிலையில்       கண்ணில் மண் தூவி கண நேரத்தில் கடந்தது மனல் லாரி  வெளிச்சமில்லா இரவிலும் ஆளை மதிக்காமல்  வேகமாய் செல்கிறது அவசரமாய் அடித்து செல்லப்படுவது அந்த ஆற்றுப் படுகையின் அடித்தள மணல். வெள்ளம் வந்தா .. இல்லையில்லை பள்ளம் தோண்டிய கொள்ளைக்காரனால்.  அதே வழியில் நடந்து சென்ற நால்வர் நகர்ந்து நின்று வேடிக்கை பார்த்தது மனிதம் இல்லா மணல் கொள்ளையை..ஏதோ ஓர் இரவில் நிலவை ரசிக்க அடுத்த தலைமுறை மணல் மேல் பாதம் பதிக்கும் முன். ஆறும் அதில் வரும் நீரும் ஆழமாய்  அழிந்து போகும் அதுவரை வேடிக்கை பார்ப்போம்.. ஆற்றங்கரை கொள்ளைக்காரனை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...