மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மருத்துவர்கள் சங்கம் ரவீந்திரநாத் குற்றச்சாட்டும், அமைச்சர் மறுப்பும்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மருத்துவர்கள் சங்கம் ரவீந்திரநாத் குற்றச்சாட்டும், அமைச்சர் மறுப்பும்.
பட்டியலினத்தைச் சேர்ந்த மருத்துவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடிருப்பதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் குற்றம்சாட்டியுள்ளார். இதை தேசிய பட்டியலினத்தோர் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திட வேண்டும் எனக் கோரியுள்ளார். அவரது அறிக்கையில்: கொரோனா தடுப்புப் பணியில் பட்டியலின மருத்துவ அலுவலர்கள் கூறுவதை பட்டியலினமல்லாத மருத்துவ அலுவலர்கள் ஏற்காத போக்கு நிலவி வருவதாகவும் பட்டியலின அலுவலர்களை சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசும் நிலையும் இருந்து வருவதாகவும்.

இது போன்றதொரு பிரச்சனையில் பட்டியலின மருத்துவ அலுவலரை, பட்டியலினம் அல்லாத இளம் மருத்துவ அலுவலர் இழிவாகப் பேசி, சட்டையைப் பிடித்துத் தாக்கியதாகவும், அந்த மருத்துவ அலுவலர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் என தகவல்.

கொரோனா தடுப்பு பணியின்போது பட்டியலின மருத்துவ அலுவலருக்கும், பட்டியலினம் அல்லாத மருத்துவருக்கும் இடையே, ஏற்பட்ட பிரச்னையை பெரியதாக்கி பட்டியலினத்தை சேர்ந்த மருத்துவ அலுவலரை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியதெனவும்

அவரது கைது விவகாரத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு இருப்பதாகக் கூறி. இந்த கைது நடவடிக்கையால் பட்டியலின மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மத்தியில் அச்சமும், பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி இருக்கிறதெனவும்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். கைது செய்யப்பட்ட மருத்துவ அலுவலரை உடனே விழுப்புரம் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும்.

அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டுமெனவும் அதுமட்டுமல்லாமல் தேசிய பட்டியலினத்தோர் மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்  அந்த அறிக்கையில் கூறிய நிலையில் மின்துறை அமைச்சர் அளித்த தகவலில்

'சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர். ரவீந்திரநாத் அவர்கள்  என் மீது அவதூறான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எனக்கு எந்தச் சம்பந்தமுமில்லாத விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உண்மைக்குத் துளியும் சம்பந்தமில்லாத அந்தக் குற்றச்சாட்டை ரவீந்திரநாத் அவர்கள் நிரூபித்துவிட்டால் தண்டனையையும் அவரே விதிக்கலாம். எந்த தண்டனையாக இருந்தாலும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அவரால் நிரூபிக்க முடியாதபட்சத்தில் ஆதாரமற்ற புரளிகளை பொதுவெளியில் அறிக்கையாக வெளியிட்டதை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். என அமைச்சர் நாகரிகமாகப் பதிலளித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்