எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை திருமயம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றத்தை தவறாகப் பேசிய பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை திருமயம்


நீதிமன்றத்தில் தாக்கல் செய்து. எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகையின் நகலை மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டதில் 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சார்ந்த மேடை அமைத்துப் பேச காவல்துறை அனுமதி மறுத்திருந்த போது நிகழ்ச்சிக்கு வந்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா காவல்துறையை அவமதித்ததுடன் நீதிமன்றத்தையும் தவறாகப் பேசிய அவதூறு பேச்சு பற்றி திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தற்போது நிலுவையிலுள்ளது. 

எச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி திமுகவின் வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது துரைசாமி மனுவை விசாரித்த நீதிமன்றம் எச்.ராஜா மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்