மூத்த தலைவர்கள் குறித்து அவதூறு கிஷோர் கே.சுவாமி கைது

சமூக வலைதளத்தில் முன்னால் முதலமைச்சர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது; 3 பிரிவுகளில் வழக்கு, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு!கிளப் கவுஸில் 7 நாட்களுக்கும் மேலாக "அரேஸ்ட் கிஷோர் கே சாமி"எனும் தலைப்பில் தான் கிஷோர் பேசினார்அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் வடக்கு திமுக ஐடி விங் சார்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஐ.டி விங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10 ஆம் தேதி புகார் கொடுத்திருந்தார். தமிழக முன்னாள் முதல்வர்கள் குறித்தும், தற்போதய தமிழக முதல்வர் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், கிஷோர் கே சுவாமி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். 

இந்த புகாரின் பேரில் கிஷோர் சுவாமி சங்கர் நகர் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்தார் நீதிபதி. இதையடுத்து கிஷோர் சாமி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை யினர் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 153 பிரிவின்கீழ் கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b) பிரிவின்கீழ், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், செக்ஷன் 505( 1) (c) படி ஒரு சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மொத்தம் 3 பிரிவுகளில் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு பாய்ந்துள்ளது.

 @sansbarrier என்ற இவரது டுவிட்டர் கணக்கு மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். வலதுசாரி எண்ணம் கொண்டவராவார். திமுக தலைவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தது வாடிக்கையாகவே இருந்தது. இவர் சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் அருகில் வசிக்கும் நபராவார்.மதுப் பழக்கம் கொண்டவர்.

தமிழகத்தின் முன்னோடியான தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைதுக்கு பின் கிளப் ஹவுஸ் தளத்தில் அவர் நடத்திய சமீபத்திய வாதங்களும் முக்கிய காரணமாகின்றன.

பாஜக ஆதரவாளராக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் மாறிய நபர் கிஷோர்.கே.சாமி   கைது

பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். அதேபோல், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் இவர் மீது சில வருடங்களுக்கு முன் புகார் வைக்கப்பட்டது.

அப்போதே இவரை கைது செய்ய வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன ஆனால் இவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 அவதூறு பேச்சு காரணமாக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

 திமுக ஆட்சிக்கு வந்தவுடனே, முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று பல முறை கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு வந்தார் . தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமாரிடம், தன்னைக் கைது செய்யும்படி சவால் விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு, இவரை தேவையில்லாத காரணங்களுக்கு எல்லாம் கைது செய்ய முடியாது என்பதால், அமைதி காத்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அறிஞர் அண்ணா குறித்து இவர் பதிவிட்ட தவறான போஸ்ட் ஒன்று  சர்ச்சையானது. இந்த போஸ்டை தொடர்ந்து கிஷோர் கே சாமி சார்பாக கிளப் ஹவுஸ் தளத்தில் விவாதம் ஒன்றும் நடந்தது.

கிளப் ஹவுஸ் செயலியில், கிஷோர் கே சாமியை கைது செய்ய வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இதை நடத்தியதே கிஷோர் கே சாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை முடிந்தால் கைது செய்யுங்கள் என்று கிஷோர் கே சாமி அதில் சவால் விட்டார். அவரின் ஆதரவாளர்கள் சிலரும்கூட கிஷோர் கே சாமிக்கு ஆதரவாகப் பேசி இருந்தனர்.

என்னை எல்லாம் கைது செய்ய முடியாது என்பது போல இந்த கிஷோர் கே சாமி வாதத்தில் சவால் விட்டு இருந்தார். இந்த தலைப்பில் ஒரு நாள் மட்டுமல்ல இரண்டு நாட்கள் வாதம் நடந்தது. தலைவர்களை பற்றி ஒரு நபர் பொய்யான அவதூறு பேசிவிட்டு, துணிச்சலாக கிளப் ஹவுசில் இப்படி சவாலும் விட்டது பரபரப்பானது. பொறுமையாக இருந்த தமிழ்நாடு அரசு இந்த கிளப் ஹவுஸ் வாதத்திற்கு பின்புதான் காவல்துறை இவரை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜூன் 28 வரை செங்கல்பட்டு சிறையில் அடைக்கும் வகையில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்