தமிழன் பிரசன்னா மனைவி நதியா
தூக்கு போட்டு தற்கொலை
திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை
தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை குறித்து சென்னை கொடுங்கையூர் காவல்துறை விசாரணை.திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா. சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடுங்கையூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை பிரசன்னாவின் மனைவி வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது. அவர் மனைவி நதியா (வயது 35).இன்று பிறந்தநாளான நிலையில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதில் அவருக்கும் அவரின் மனைவி நதியாவுக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் மனவேதனையில் நதியா, வீட்டில் இன்று முற்பகல் 11 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இது தொடர்பாக தமிழன் பிரசன்னாவிடம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.








கருத்துகள்