வைரலாகும் மக்கள் நல்வாழ்வு மருத்துவத் துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவத்துறையில் யாரும் பணிமாறுதல்  (ட்ரான்ஸ்பர்) கேட்டு என்னை நேரில் அணுக வேண்டாம், எல்லாம் வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகிறது என்று மக்கள் நல்வாழ்வு மருத்துவத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தனது அலுவலகத்தின் முகப்பில் அறிவிப்பு  ஒட்டியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பல நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கும் மா சுப்பிரமணியன், அவரது அலுவலக வாயிலில் ஓட்டிய அறிவிப்பு தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் அலுவலகம் முன்பு உள்ள பதிவு அப்படியே, "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும் வெளிப்படையான (transparency) கலந்தாய்வின் வாயிலாக நடைபெறுவதால் பணியிட மாறுதல் தொடர்பாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்தை அணுக வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் அலுவலகம் சார்பாக வெளியே ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் பதிவினை பார்த்த பலரும் இதேபோல் அனைத்து துறைகளும் இயங்கினால் சிறப்பாக இருக்குமென்று  பாராட்டுகிறார்கள்,.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்