முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது



பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து இந்திய உணவு கழகத்தின் (தென் மண்டலம்) தலைமை இயக்குநர் திரு ஆர் டி நஸீம், தமிழக பொது மேலாளர் திரு ஜே எஸ் சிஜூ ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று திரு நஸீம் தெரிவித்தார்.

“கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காகவும், உணவின்றி யாரும் வாடக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கிலும், பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த வரும் ஏப்ரல் மாதம் இந்திய அரசு தொடங்கியது,” என்று அவர் கூறினார்.

இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், கொரோனா இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு இந்தாண்டு நவம்பர் வரை மாண்புமிகு பிரதமரால் மேலும் நீட்டிக்கப்பட்டது என்று கூறிய திரு நஸீம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தகுதியுடைய 3.57 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி/கோதுமை ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கிடைக்கும் படி இத்திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த இரு மாதங்களாக கூடுதல் அரிசியை தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷனுக்கு கொடுத்துள்ளோம். அடுத்த ஐந்து மாதங்களுக்கு (ஜூலை முதல் நவம்பர் வரை) ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை முற்றிலும் இலவசமாக வழங்க இந்திய உணவு கழகம் தயராக உள்ளது. அவற்றை எடுத்தும் செல்லும் பணியை மாநில அரசும் தொடங்கி விட்டது என்று திரு நஸீம் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு சாதாரணமாகவே 3 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை தேவைப்படுவதாகவும், அதற்கு கூடுதலாக 1.78 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுவைக்கு இது வரை மூன்று கட்டங்களாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன (15 லட்சத்து 78 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 72 ஆயிரத்து 830 மெட்ரிக் டன் கோதுமை) இதற்காக இந்திய அரசு ரூ. 7588 கோடியை செலவிட்டுள்ளது.

அடுத்த ஐந்து மாதங்களில் 9 லட்சம் டன்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ. 3325 கோடி ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

வழக்கமாக வழங்கப்படும் உணவு தானிய வகைகளை விட இது இருமடங்கு கூடுதலான அளவு என்பதால் இதன் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாபெரும் சவாலாக விளங்குகிறது. இத்தகைய சவாலை எதிர்கொண்டு ஊரடங்கு கால இக்கட்டான தருணங்களில் உணவு தானியங்களை மாநிலத்தின் அந்தந்தப் பகுதிகளில் கொண்டு சேர்ப்பதில் இந்திய உணவுக் கழகம் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு உள்ளது என்றும் அவர் விளக்கினார்.

நடப்பாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமார் 36 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்குகளில் மாநில அரசு 17 லட்சத்து 6 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் திரு நஸீம் கூறினார்.

நாடு முழுவதும் உணவு தானிய விளைச்சல் மிகச் சிறப்பாக இருப்பதால் வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 19 லட்சத்து 44 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் அரிசியும் 75 ஆயிரத்து 776 டன் கோதுமை பஞ்சாபில் இருந்தும் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக இந்த உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கையிருப்பில் 30 லட்சம் டன் தானியங்கள் உள்ளன. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்த கூடுதல் தானியங்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்

செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இயக்குநர், திரு குருபாபு பலராமன் உடனிருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...